பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அ. அ. ச. ஞானசம்பந்தன் ஆனால் காஞ்சி சென்ற பொழுது வானத்தை முட்டும் கைலாயநாதர் கோயிலைப் பாடமறுத்து அதன் அண்மை யிலுள்ள ஒரு சுற்றுடைய 'கச்சி அநேகங்காவதம்’ என்ற கோயிலை மட்டுமே பாடினார். சோழர் கட்டிய கோயில்களைப் பாடியது ஏன்? இதன் எதிராகச் சோழர்களைக் காளாமுகச் செல் வாக்கிலிருந்து இழுப்பதற்காகவே அவர்கள் கட்டிய கோயில்கட்கும் இசைப்பாப் பாடினார். திருவிசைப் பாடல்கள் தேவாரம்,திருவாசகம் போன்று எளிய மக்களும் கற்று உணர்ந்து பாடிப் பயன்பெறப் பாடப்பெற்றவையே யாகும். எனவே அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து அறியப்படவேண்டிய பகுதிகள் குறைவாகவே இருக்கும். அன்பு நெறியில் செல்பவர்கட்குத் தத்துவ விசாரணையில் அதிகக் கவனம் செல்லாது. இவற்றைப் பாடியவர்கள் அறிவாற்றலில் சிறந்த தத்துவ ஞானிகளேயாயினும் அறிவால் குறைந்த சாதாரண மக்களை மனத்துட் கொண் டிருந்தமையின் அன்பு நெறியையே பெரிதும் போற்றிக் கூறினர். இடை இடையே தத்துவக் கருத்துகள் காணப் பெறுமே தவிர இது தோத்திர நூலே தவிரச் சாத்திர நூலன்று. இசைப்பர் தோத்திர நூலே : 'ஒளிவிளர் விளக்கே உலப்பிலா ஒன்றே என்ற திருமாளிகைத் தேவர் சித்தத்துள் தித்திக்கும் தேன்' என்றும், 'அளிபவர் உள்ளத்து ஆனந்தக் கனி' என்றும் தில்லைக் கூத்தனைக் குறிக்கின்றார். சித்தம் புற மனத்தைத் தாண்டி நிற்கும் ஒன்று. இதனை (SubConscious state) எனலாம். அதிலுந் தித்தித்தலாவது நாமாகச் செய்துகொள்ளும் பழக்கத்தால் வருவதன்று; மனம் முழுதும் நிறைந்த வழியே சித்தத்தில் ஒன்றித் தேங்கும். - .