பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 அ அ. ச. ஞானசம்பந்தன் சந்தப் பாடல்கள் : 'பவள மே மகுடம்: பவளமே திருவாய்; பவளமே திருஉடம்பு அதனில் தவளமே களபம்; த வளமே புரிநூல்; தவளமே முறுவல்: ஆடுஅரவந் துவளுமே; கலையுந் துகிலும்...' –95 என்பன போன்ற சந்த இன்பம் நிறைந்த பாடல்களும் உண்டு. வேணாட் டடிகள் என்பார் பாடிய இசைப்பாப் பதிகத்தில் தம்பானை சாயப் பற்றார் (206) பொகிய யாதோ கீழ்க்கொம்பு’ (207) கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறி கொள்வர் (205) என்பன போன்ற பழமொழிகள் இடம் பெறுகின்றன. திருமாளிகைத் தேவர் இயற்றிய கோயில் பற்றிய இசைப்பாவில் வரும் சில பாடல்கள் நம்மாழ்வார் பாடலை நினைவூட்டுகின்றன. "சேவேந்து வேல்கோடி யானே! என்னும் சிவனே சேமத் துணையே! என்னும் மாவேந்து சாரல் மகேந்திரத்தின் வளர் நாயகா: இங்கே வாராய் என்னும் -30 இப்பாடல் நம்மாழ்வாரின் 'மண்ணை இருந்து துழாவி இது வாமனன் மண் என்னும்; விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம் கைகாட்டும்...... (3264) என்ற பாடலை நினைவூட்டுகிறது. புரட்சிக்கு வித்திட்டவை இசைப்பபாக்களே; 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் காளாமுகர்களை எதிர்த்து நடைபெற்ற அமைதியான புரட்சிகளின் பயனாக 1200 வாக்கில் குகையிடிக் கலகம் நடைபெற்றுக் காளாமுகர் செல்வாக்குத் தமிழ்நாட்டில ஒழிந்தது. தமிழ் - மரபுக்கேற்பப் பக்திப்பாடல்களைப் பாடிப் பக்தி இயக்