பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0.175 கத்தை வளர்த்ததே இப்புரட்சிக்குக் காரணமாயிற்று. அப்பணியைச் செய்த பெருமை முன்னரே இருந்த தேவாரங்களுடன் புதியனவாய்ப் படைக்கப்பெற்ற திருவிசைப் பாவுக்கே உரியது. மேலும் தம் எதிரில் வாழ்கின்ற சோழர்கள் கட்டிய கோயில்களைப் போற்றும் வகையில் இப் பாடல்கள் தோன்றினவாகலின் அந்தப் பிராந்தியத்தில் வாழுகின்ற மக்களின் நாட்டுப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் சமய உணர்வையும் வளர்க்க இப் பாடல்கள் துணை புரிந்தன. திருமுறை கண்ட புராணம் உண்மையா? இத்துணைக் குழப்பத்திற்கும் காரணமாக அமைந்தது. 'திருமுறை கண்ட புராணம்' என்ற பெயரில் வழங்குகின்ற ஒருசில பாடல்களாகும். அது உமாபதி சிவம் இயற்றியது என்று கூறப்பெற்றதால் பலரும் அதனை வேத வாக்காக நம்பித் தம் ஆராய்ச்சிக் கோட்டையை அதன்மேல் கட்டினர். யார் இயற்றியது? பெரிய புராணத்தை பதிப்பித்த யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் தமது முதற்பதிப்பில் இந் நூலையும் சேர்த்து அடிக்குறிப்பாக இதனை இயற்றி யவர் யார் என்று அறியக் கூடவில்லை. சிலர் உமாபதி சிவம் என்றும் கூறுவர் என்று எழுதினார். அடுத்த பதிப் புகளை வெளியிட்டவர்கள் இந்த அடிக்குறிப்பை எடுத்து விட்டு உமாபதி சிவாச்சாரியர் அருளியது என்றே பதப் பிதது விட்டனர். 11ஆம் திருமுறை : . . . . 9ஆம் திருமுறையின் நிலை இது என்றால் 11ஆம் திருமுறைபற்றிக் கூறத் தேவையில்லை. காலத்தால் ஞானசம்பந்தருக்கும் முற்பட்ட காரைக் கால்