பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 © அ. ச. ஞானசம்பந்தன் இத் தத்துவ வாதிகளின் ஆராய்ச்சியும் வளர்ச்சியும் மிகச் சிறந்த நிலையை அடைந்தன எனினும் மக்கள் வாழ்வோடு தொடர்பு கொள்ளாமையின் பனைமர வளர்ச்சி போல யாருக்கும் பயன்படாத வளர்ச்சியாக ஆயிற்று. இங் நாட்டு வளர்ச்சி : இனி இம்மாதிரியான தத்துவ ஆராய்ச்சியில் இந் நாட்டுப் பக்தர்கள் ஈடுபட்டார்களா என்று ஆய்வதும் பயனுடைய செயலேயாகும். பக்தர்கள் உணர்வைப் பெரி தாகப் போற்றகின்றவர்கள் என்றமையால் அவர்கள் அறிவின் துணை கொண்டு செய்யப்பெறும் தத்துவ ஆராய்ச்சியில் இறங்கவில்லையோ என்று ஐயறவேண்டா. அவர்களும் இத்தகைய தத்துவ ஆராய்ச்சியில் நிரம்ப இறங்கியதுண்டு. ஆனால் எத்துறையில் இறங்கினாலும் அவர்கள் மனித வாழ்க்கையோடு தமக்குள்ள தொடர்பை மறந்ததே இல்லை. தத்துவமாயினும் பக்தியாயினும் அது மனிதனுடைய செயல்களில் ஒன்றே. முதலது மனிதன் அறிவுகொண்டு செய்யப் பெறுவது; மற்றையது அவனு டைய உணர்வுகொண்டு செய்யப் பெறுவது. எனவே இரண்டிலும் ஈடுபடுபவன் மனிதனே. மனிதன் என்றால் அவன் சமுதாயத்தில் கூடிவாழும் (Gregarious mature) இயல்புடைய பிராணி தானே! எனவே அத் தொடர்பை மனத்துட் கொண்டே இவை இரண்டு பற்றியும் ஆய்ந் தனர் இந் நாட்டார். இதன் பயன் என்னையெனில் இச்சமுதாயம் எத் துணைத் தூரம் வளர்ந்தாலும் இவன் தோன்றிய தத்துவ ஞானம் பற்றிய ஆராய்ச்சியும் பக்திபற்றிய ஆராய்ச்சியும் சமுதாயத் தொடர்பை விடாமல் பற்றிநின்றன. தருவள்ளுவர் போன்ற ஒருவர் இரண்டாயிரம் ஆண்டு கான முன்னர் க் கண்டு கூறிய சில உண்மைகள்