பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 0 அ. ச. ஞானசம்பந்தன் கட்கு வருவதில்லை. இல் பொருளாகிய மாயை என்று அனைத்தையும் நினைக்கத் தொடங்கிவிட்டால் அந்த எதிர்மறை வழி பக்தனுக்கு ஊக்கத்தைத் தருவதில்லை. கடவுள் : பக்தர்களைப் பொறுத்தமட்டில், இறைப்பொருளுக் குரிய பல்வேறு பெயர்களுள் கடவுள்' என்ற பெயரே முற்றிலும் விரும்பத்தகுந்ததாகும். வாக்கு, மனம் என்பவற்றைக் கடந்து நிற்றலின் 'கட' என்ற சொல்லை. யும், என்றாலும் எல்லாவற்றினுங் கலந்து நிற்றலின் 'உள்' என்ற சொல்லையும் சேர்த்துக் கடவுள் என்று பெயர் சூட்டினான் தமிழன். எல்லாவற்றையும் கடந்தும் அவற்றின் உள்ளுமாகியும் நிற்கும் அப்பொருள் மாறு: பாடு, வளர்ச்சி, தேய்வு முதலிய எதுவுமற்றது என்றும் இப்பக்தர்கள் கூறினர். உண்மை விஞ்ஞானி : எத்துணைதான் அறிவும், விஞ்ஞானமும் வளர்ந்: துள்ளன என்று கூறினாலும் உண்மையான விஞ்ஞானிகள் இத்துணை வளர்ச்சியையும் கண்ட பிறகு தாங்கள் காணாதது எத்துணை என்பதைத்தான் நினைக்கிறார் கள். பால்வெளி (Milky Way) என்பது இப்பெரும் அண்டத்திலுள்ள பல கோடி உறுப்புகளில் ஒன்றாகும். அந்தப் பால்வெளியில் உள்ள கோடிக்கணக்கான குடும். பங்களில் சூரியன் குடும்பம் (Solar system) ஒன்று. இந்தச் சூரிய குடும்பத்தில் நாம் வாழும் பூமி ஒன்று. அதில் நாம் வாழுகிற நாடும் அதிலுள்ள ஒரு மூலையும் எத்துணைச் சிறியது? இதில் நாம் கண்டுபிடிக்கும் விஞ்ஞானப் புதுமைகள் எத்துணை நிலையற்றவை? அணுக்களின் இருப்பைக் கண்டு கூறிய டால்டன் (Dalton) சித்தாந்தம் போன்றவை எத்துணை நிலையற்றவை? இவற்றை வைத்துக்கொண்டு அண்டம் முழுவதற்கும் ஒரு பொது