பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 e அ. ச. ஞானசம்பந்தன் மூலப் பொருளை ஒன்று என்பதன் நோக்கம் அதனை அடுத்த இரண்டாவது ஒன்று இல்லை என்ற அடிப்படையி லன்று. இரண்டு ஒன்றுகள் சேர்ந்தால் இரண்டாகும். இரண்டு என்ற எண்ணின் மூலப்பொருள்கள் ஒன்றும் மற்றோர் ஒன்றுமாகும் (1+1) = 2. எண்ணிக்கையில் வரும் இந்த ஒன்று வேறு. இறைவனை ஒன்று என்று கூறுவதில் பயன்படும் ஒன்று வேறு. இந்த ஒன்று இதனையல்லாமல் வேறு ஒரு பொருளும் இல்லை என்பதை அறிவிக்கும் அலகு (absolute unit) சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் நின்ற நின் தன்மை நினைப்பற நினைந்தேன்; நீயலால் பிறிது மற்று இன்மை' (கோயில்-7) என்று மணிவாசகர் கூறும்பொழுது பக்தி அனுபவத்தின் தலையாய அனுபவம் பெற்றவர் பேசுகிறார் என்பதை உணர முடிகிறது. கடந்து நிற்கும் பொருள்: கடந்து நிற்கும் ஒன்றை அறிதல் இயலாத காரியம். அறிதல் என்றாலே அளவுக்குட்பட்டதாக ஆக்குவதாகும். கடந்து நிற்பது என்றால் அதனை அறிய முற்படும் அறி வையும் கடந்து நிற்பது தானே பொருள். ஆனால் அறிய முயன்ற முயற்சியில் கிடைக்கும் பயன் ஒன்றுண்டு. அதுவே அது கடந்து நிற்பது; முற்றிலுமாக அறிய முடியாதது என்பதை அறிந்து கொள்ளுதலாகும்." டீன் இஞ்ச் கூறும் இக்கருத்தை மணிவாசகரும் தாயுமான வரும் என்றோ கூறிப் போயினர். - 2. We cannot know the infinite, for to know is to limit; but we can know the fact of the infinite, for this is implied ih the act of knowing. Mysticism & Religion 205