பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் e 39 இடையே காணப்பெறும் ஒன்றல் தன்மை (Unity which underlies all diversity, harmony which reconciles all contradictions) என்பவற்றின் மூலம் கடவுள் வெளிப் பாட்டை அறிவு வாதிகள் சிலர் காணமுடிந்தது. அறிவு வாதத்தால் அறியமுடியாத ஒன்றைக்கூட ஆழ்ந்த பக்தியின் மூலம் அறியமுடியும் என பிளேட்டோ கூறியதும் நோக்கற்குரியது. முற்றிலும் சத்திய வடிவான பொருள் முற்றிலும் அறியப்படத்தக்கதாகவே இருத்தல் வேண்டும்; நம்மால் முற்றிலும் இங்கே அதனை அறிய முடியாவிடினும் அது முற்றிலும் அறியக்கூடியதே." என்பது அவரது வாதம். பிளேட்டோவின் இந்த வாதத்தில் நம் நாட்டவர் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றதை மறுப்பர். பொருள் முற்றிலும் சத்தியவடிவானது (fully real) என்பதை நம்மவர் ஏற்பர். அது அறியப்படத் தக்கது என்பதைக் கூட ஏற்பர் ஆனால் அது முற்றிலும் அறியக் கூடியது என்பதை இவர்கள் ஏற்பதில்லை. எந்த நிலையில் அது அறியக் கூடியதாக ஆகிறதோ அன்றே அது கடவுள்' என்ற தன் பெயர்த் தன்மையை இழந்துவிடும். வாக்கு மனம் முதலியலற்றைக்கடத்திருத்தலினால்தானே கடவுள் என்ற பெயர் அதற்கு வந்தது. எனவே அது முற்றிலு மாக அறியக்கூடியது என்ற பிளேட்டோவின் கருத்து இந்நாட்டுப் பக்தர்கள் தத்துவவாதிகள் இருவரும் ஏற்க முடியாத ஒன்றாகும். கீழே உள்ள முருகாற்றுப்படையின் இறுதிப் பகுதியே இதனை வலியுறுத்தல் காணலாம். 1. Plato's brave act of faith that the fully real is fully knowable - not full known to us here, but fully knovvable – Mysticism în Religion, – W. R. Inge P. 17 (1969). 2. சீதை-விசுவரூட யோகம்-48, 53. -