பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் .ே 4.3 வேண்டும் என்று கூறிக்கொண்டு மிகச்சிறந்த உலகாயத வாதிகளாகவும் ஆகிவிட்டனர்.' ' இன்றைய நிலை : இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள சமயங்கள், அவற்றை ஆட்சி செய்யும் நிறுவனங்கள் முதலியவற்றை யும், இடைக்காலத்தில் ரோமன் கதோவிக்கர் ஐரோப்பிய அரசியலில் புகுந்து புறப்பட்டதையும் போப்பாண்ட வர்கள் படை வைத்துக்கொண்டு நேரடியாகவும் மறை முகமாகவும் ஐரோப்பிய அரசியலில் தலையிட்டதையும், இந் நாட்டில் பெளத்த, சமண, சைவர்கள் என்போர் அவ்வப்போது அரசியல், செல்வாக்கைப் பெற்று ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டதையும், இற்றை நாளிற்கூட மடங்கள் என்ற பெயரில் மாபெரும் வாணிக நிறு வனங்கள் எல்லாச் சமயத்தாராலும் காப்பாற்றப்படுவ தையும் காணும்பொழுது பர்டைஃப் கூறியவை எத் துணை உண்மை என்பது விளங்கும். இச்சமய நிறு வனங்கள் அனைத்திலும் புகுந்து பார்த்தால் இந்நிறுவனங் களை விட்டுப் பக்தியும், உண்மைச் சமயக் கொள்கை களும் பன்னூறு ஆண்டுகளின் முன்பே விடைபெற்றுச் சென்று விட்டனவென்பது விளங்கும். கிறுவனங்கள் ஏன்? நிறுவன அடிப்படையை மேற்கொண்ட எந்தச் சமயமும் உண்மைப் பக்தியும் ஒருநாளும் ஒன்றாய் 1. As Berdyaeft says, men have set themselves to hate in the cause of love, to use compulsion in the name of freedom, and to become practising materialists for the inculcation of spiritual principles. – Mysticism in Religion P. 18.