பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 e அ. ச. ஞானசம்பந்தன் காட்சிகள். பொறி புலன்கள் அனைத்தும் மிகக் கூர்மை யாகத் தொழிற்படுகின்ற நேரத்திலேயே இக்காட்சி கிடைககிறது. எல்லாப் பொறிகளும் புலன்களும் தனித் தனியே தத்தம் பணிகளைச் செய்யாமல் அனைத்தும் ஏதாவது ஒரு பொறிவழிச் செல்லவும் (உதாரணமாக கண்வழி) அந்தக்கரணம் என்று கூறப்பெறும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கும் சிந்தை என்ற ஒர் அந்தக் கரணத்தின் வழியே தொழிற்படவும் குணங்கள் எனப்பெறும் இராஜஸ், தாமச, சத்துவம் என்ற மூன்று குணங்களில் சத்துவம் மட்டுமே தொழிற் படவும் உள்ள நிலையில்தான் கடவுள் காட்சி கிடைக் கிறது. இதனைச் சேக்கிழார் மிக விளக்கமாக சுந்தர மூர்த்திகள் சிதம்பரத்தில் அத்தனை வணங்கும் நிலையைக் கூறும்பொழுது எடுத்து விளக்குகின்றார். ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த - எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.' -தடுத். புரா. 106 இனி இதே கருத்தை மொழி பெயர்த்ததுபோல டி. எச். ஹியூக்ஸ் என்ற பெரியார் கூறுகிறார். (பக்தனுக்கு) ஆன்மா ஒருமுகப்பட்டு அமைதியாக இருக்கிறது என்றால் அந்த அடக்கம் தொழிற்படாமலும் சோம்பியும் இருக்கும் அடக்கமன்று. பொறி புலன்கள் ஆகிய அனைத்தும் ஓரிடத்தில் குவியுமாறு செய்தலும் அதன் பயனாக