பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் இ 61 .சுட்டினுள் அடங்காதவர்கள் : இப் பெரியார்கள் இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் எல்லாக் காலங்களிலும் தோன்றினர்; தோன்றுகின்றனர்; தோன்றுவர். கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து நிற்பதுதான் இவர்களின் சிறப்பாகும். இவர்கள் தம் கருத்துக்களைப் பரப்பும்பொழுது ஏதாவது ஒரு சமய நெறியில் நின்றே பரப்புவர். அச் சமயத்தார் கூறும் இறைப்பெயர்களையே இவர்களும் கூறுவர். இறைவ னுக்கு ஒரு குறிப்பிட்ட பெயரை இவர்கள் கூறிவிட்ட ஒரே காரணத்திற்காக இவர்களை அந்தக் குறிப்பிட்ட சமயம் என்ற விலங்கினுள் மாட்டிவிட்டால் விளைவது அவலமேயாகும். உதாரணமாக சைவ சமயத்திற்குக் கூறப்பெறும் எவ்விதச் சடங்குகளும் இல்லாமலேயே திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிவிட்டார். தம் திருமணத்திற்கு வந்திருந்த அனைவ ரையும் அவர்கள் பக்குவிகளா அபக்குவிகளா என்பதைக் கூடப் பாராமல் அனைவரையும் வீடு புகுமாறு செய்தார் திருஞானசம்பந்தப் பிள்ளையார். ஆதிசைவ குலத்தில் பிறந்த நம்பியாரூரர் பதியிலார் குலத்தவராகிய பரவையை மணந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணராகிய அரிசனரைத் தம் உடன் வைத்துக்கொண்டார். பிள்ளையார். சமயங்களின் இன்றைய நிலைமை: இவை அனைத்தும் இவர்கள் ஒரு சமயக் கூட்டினுள் அடங்காதவர்கள் என்பதையே அறிவுறுத்துகின்றன. அதேபோல வழங்கும் சமயங்கள் அனைத்தும் எந்தக் கொள்கையின் அடிப்படையில் தோன்றினவோ அந்தக் கொள்கையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு வாணிக நிறுவனங்களாக மாறிவிட்டன. 'ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரன் வீடுபேற்றை