பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 0 அ. ச. ஞானசம்பந்தன் அடைய முடியாது’ எனக் கூறிய இயேசு பெருமானின் சமயத்தைப் பரப்பும் நிறுவனம் உலகப் பணக்காரர்கள் ஒரு சிலருள் தானும் ஒன்றாய் விளங்குகிறது. ஏதுக் களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டு நின்றுளன் எங்கள் சோதியான்' (3-54-5) என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் கூறி இருப்பவும் அதனைப் பரப்புவதாகக் கூறிக்கொள்ளும். மடங்கள் பிறப்பால் சைவரா என்ற ஆராய்ச்சியிலும் சாத்திர நூல்களை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய் வதிலும் பொழுதைக் கழிக்கின்றன. 'அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் என்றும் படமாடுங் கோயில் பரமற்கு ஒன்று ஈயின் நடமாடுங்கோயில் நம்பர்க்கு அங்கு. ஆகாது' என்றும் திருமூலர் கூறியிருப்பவும் சைவ மடங்கள் மக்கள் தொண்டு எதனையும் செய்யாமல் இருப்பது இற்றைநாள் உண்மை. வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்' என்று பெரியார்கள் கூறி யிருப்பவும் 'தெளியாத மறை நிலங்கள் தெளிந்தாமன்றே, என்று வேதாந்த தேசிகரே கூறியிருப்பவும் தென்கலை வடகலைச் சண்டை முற்றி பிரீவிக் கெளன்சிலில் வெள்ளைக்காரன் தரும் நீதியை ஏற்கும் அளவிற்கு வைணவ சமயம் போய்விட்டது. பெளத்த, சமண சமயங், களும் இதே கதியை அடைந்துவிட்டன. சமயப் பொறை தேவை : ஒரு காலத்தில் இந்த நாட்டில் சைவம், வைணவம், சமணம்,பெளத்தம் என்பவை ஒன்றுடன் ஒன்று அன்புடன் வாழ்ந்தமையால்தான் ஒவ்வொரு சமயமும் மற்றைச் சமயத்திடம் காணப்பெற்ற சிறந்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று இச் சமயங்கள் அனைத்துமே அழுகிக் கொண்டிருக்கின்றன. இளஞ் சமுதாயம் இச் சமயங்களில் எவ்வித ஆறுதலையும் பெற முடியவில்லை யாகலின் இவற்றைப்பற்றிக் கவலைப்.