பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-64 ) அ. ச. ஞானசம்பத்தன் தாகவே தெரியவில்லை. இந்த உலகையும் பிறப்பையும் வெறுத்து வேண்டா என்று கூறுகின்ற எதிர் மறைத் .g 3 gaiio [Negative Philosophy] @aufráêr lori® இல்லை. இப் பிறப்பெடுத்தமையின் மக்களுக்குத் தொண்டு செய்யவும், இறைவனை வழிபடவும் வாய்ப்புக் கிடைத்தமையின் அதுவே இப் பிறவியை மேலும் விரும்பு தற்குக் காரணமாயிற்று. 'மணித்தப் பிறவியும் வேண்டு வதே இந்த மாநிலத்தே' (4-81-4) என்று நாவரசரும், இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச் சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே' (திருமாலை-2) என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் கூறுதல் அறியத்தக்கன நரகம் முதலியவற்றை இவர்கள் கூறினும் அதன் மாட்டு அச்சம் கொண்டதாகக் கூறல் இயலாது. சாவிற்கும் அச்சம் இல்லை : இறப்பு என்பது பற்றியும் இவர்கள் கவலைப்பட்ட தாகவோ அஞ்சியதாகவோ அறிய முடியவில்லை. திருக் குறளும் உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (339) என்று கூறுமுகத்தான் சாவின் மாட்டு அச்சம் தேவை இல்லை என்பதைக் குறித்துச் செல்கிறது. இறப்பின் பின்னே நிகழ்வதைப் பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. இறந்த பின்னர் மறுபிறப்பு உண்டு என்பதையும், இறந்த உயிர் இப் பிறப்பிற் செய்த நல்வினை தீவினை என்பவற்றிற்கேற்ப ஓர் உடலைப் பெறும் என இந்நாட்டு பக்தர்கள் நம்பி னர். மேலும் மானிடப் பிறவி பிறவிகளுள் உயர்ந்தது என்றும் அதனைப் பெறுதற்கு முன் ஒர் உயிர் பல்வேறு பிறப்புக்களையும் எடுத்துக் கூர்தல் முறையில் (evolution) இறுதியாக மானுடப் பிறப்பை எய்துகிறதென்றும் நம்பினர். மணிவாசகப்பெருமான்,