பக்கம்:தந்தையின் ஆணை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தந்தையின் ஆணை 'என்னய்யா! நீர் ஓர் சு.ம.ஆயிற்றே? இப்படி மூடப்பழக்கத்திற்கு ஆதரவு கொடுக்கலாமா?' என்று அவரது நண்பர்கள் சிலர் கேட்டுவிட்டனர். அதைக் கேட்டு அவர் பயந்துவிடவில்லை. "பீடி சிகரெட் குடிப் து கெடுதின்னு தெரிந்தும், பழகின தோசத்தினாலே அதை விட முடியல்ல; அதைப்போலத்தான் மூடத் தனம்னு தெரிந்தும் அதை ஏனோ நிறுத்தமுடியல்ல என்று குதர்க்கமாகவும் குத்தலாகவும் பதில் சொல்ல ஆரம்பித்தார். அதற்குமேல் அவரிடம் யாருமே பேச வில்லை. தாலி கட்ட சேகர் பெண் வீட்டுக்கு வந்தான். வாசலில் 'ஆரத்தி' எடுக்கப்பட்டது. அதைக் கண்டு அவன் நண்பர்கள் அவனை கேலி செய்தனர். பின் மணச் சடங்கு முடிந்ததும் தம்பதிகளுக்கு கட்டுக் கட்டாக

  • திருநீர்' பூசப்பட்டது. அப்புறம் கொட்டு மேளத்துடன்

ஊர்வலம் புறப்பட்டது. சேகரும் லீலாவும் ஓரு கோச் வண்டியில் உட்கார்ந்திருந்தனர். அந்த வண்டியிலே எதிரே ஒரு கண்ணாடி மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள - சிரிப்பை பரிமாறிக்கொள்ள வண்டிக் காரனின் முன்னேற்பாடுதான் அந்த கண்ணாடி. சேகர் ஆவலோடு அந்த கண்ணாடியை பார்த்துக்கொண்டிருந் தான். லீலா நிமிர்ந்து பார்ப்பாள் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் எதிர்பார்த்தான். ஆனால் ஒரே ஏமாற்றம் லீலா குனிந்தபடியே இருந்தாள். வெட்கம் பெண்களுக்கு அவசியம் என்றாலும் இப்படியா கூனிப்போய் இருக்க வேண்டும்? இத்தனை நாளும் அடிமையாக அடைபட் டிருந்த பெண்ணை விடுதலைப்படுத்தி வெளியே கொண்டு வந்தால் இப்படியா இருப்பது? படித்த சேகர் இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/13&oldid=1740973" இலிருந்து மீள்விக்கப்பட்டது