பக்கம்:தந்தையின் ஆணை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைந்தம்பி 13 யெல்லாம் நினைத்தான் ஆனால் வெளி உலகம் தெரியாத லீலாவுக்கு இந்த நாகரீகமெல்லாம் தெரிய முடியுமா ? அதிலும் லீலா புதுப்பெண். பல வருடங்களாக இருட்டிலேயே இருந்தவள். திடீரென்று ஒளியைக் கண்டால் கண்கள் திறக்க முடியாமல் கூசத்தானே செய்யும்? இந்த உண்மை சிலருக்குத் தெரிவதில்லை. திடீரென்று 'பட்டிக்காட்டுப் பெண்' என்று பட்டம் சூட்டி விடுகிறார்கள். சேகர் கூட லீலாவை அப்படித் தான் நினைத்தான். சாந்தி முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டது. . . சேகரின் நண்பர்கள் அவனுக்கு ஏதேதோ போதனைகள் செய்தார் கள். கல்யாண அனுபவமுள்ள சில நண்பர்கள் மறக்க முடியாத முதல் இரவு ' காட்சிகளை அழகுபட சேகருக்கு வர்ணித்தார்கள். மேரீஸ்டோப் செக்ஸ் ஆராய்ச்சி களையும், கீட்ஸ் காதல் கவிதைகளையும், ரெஜினால்டு நாவல்களையும் கரைத்து குடிக்கும் கல்லூரி மாணவனான சேகருக்கு இதெல்லாம் தேவையா? ? . அன்று இரவு 8-30 மணி இருக்கும் சேகரை அழைக்க பெண் வழியில் இருந்து ஒரு ஆள் வந்தான். போடாத வாசனைத் திரவியமெல்லாம் போட்டு ஜம் என்று சேகர் புறப்பட்டான். பெண் வீட்டிலே மாப் பிள்ளைக்கு தடபுடலான வரவேற்பு. பப்படம் பாயாசம் உள்பட பலமான விருந்து நடந்தது. சாப்பிட்டு முடிந் ததும் சேகர் பெஞ்சின்மீது உட்கார்ந்தான். பெஞ்சில் இருந்து "பொறு பொறு" என்று சப்தம் கேட்டது. பெஞ்சு கனம் பொறுக்கமாட்டாமல் நொறுங்குகிறதோ என்று சேகர் நினைத்தான். ஆனால் அடுத்த வினாடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/14&oldid=1740974" இலிருந்து மீள்விக்கப்பட்டது