பக்கம்:தந்தையின் ஆணை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தந்தையின் ஆணை செத்து பிழைக்கிறான்! ஆனால் ஒரேதடவைதான் பிறக் கிறான். அதேபோலதான் மனிதன் எத்தனை கல்யாணம் செய்தாலும் 'முதல் இரவு ஒருதடவைதான் வருகிறது. அதனால்தான் முதல் இரவையும் பிறந்த நாளையும் மக்கள் சிறந்த நாளாக மதிக்கின்றனர். இந்த முதல் இரவுக்குப்பின் ஒரு மாதம் வரை சேகர் உல்லாசமாக பொழுதைப் போக்கினான். ஆனால் அதற்கு பிறகு? 6. பிரிவு டாக்டர் படிப்புக்காக சென்னை செல்லவேண்டிய வேலையை சேகர் பார்க்கவேண்டியதாயிற்று. வைத்தியக் கல்லூரியிலே சேருவதென்றால் ற சாதாரணமானதல்ல. அதிலும் ஏழை எளியவர்கள் வைத்திய கல்லூரியிலும். இஞ்ஜினியரிங் கல்லூரியிலும் சேருவதென்றால் இமயமலை யிலே தவமிருந்து ஈஸ்வரனை பிரத்யட்சமாகக் காண்ப தற்கு ஒப்பாகும் ! ஏனெனில் அவ்வளவு கஷ்டம் இருந் தது. தகுதி, திறமை என்ற பெயரால் தாழ்த்தப்பட்ட மக்களும். சாதாரண ஜனங்களும் சங்கடத்திற்குள்ளா னார்கள். பிராமணர்களுக்குப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும்போது அதை எல்லோரும் வரவேற்க வேண்டியதுதான். ஆனால், அரசாங்கத்தில் போதிய பள்ளிக்கூட வசதி இல்லாவிட்டால்......? ஜனத்தொகை யிலே மிகவும் குறைந்த அதாவது நூற்றுக்கு மூன்று பேராக உள்ள பிராமணர்கள் மற்ற சகோதரர்களுக்காக விட்டுக்கொடுக்கவேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/17&oldid=1740978" இலிருந்து மீள்விக்கப்பட்டது