பக்கம்:தந்தையின் ஆணை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தந்தையின் ஆணை விடம் எல்லோரும் க்ஷேமம் அவ்விடம் க்ஷேமத்திற்கு உன் கடிதம் பார்த்து சந்தோஷப்பட்டோம். அடிக்கடி எழுதவும். அம்மா, லீலா. மாணிக்கம், மற்ற எல்லோரும் நல்ல சுகமாக இருக்கிறோம். எடுத்த காரியத்தை நீ வெற்றிகரமாக முடிக்கவேண்டும் என்று எல்லோரும் பிரியப்படுகிறோம். பட்டிக்காட்டிலே இத்தனை நாளும் இருந்த உனக்கு பட்டணம் ஒரு மாதிரியாகத் தெரியும். பட்டணம் பார்வைக்கு அழகாகவும், பொழுது போவதற்கு சுலப மாகவும் உள்ள இடமாக இருக்கும். அதில் எல்லாம் உன் மனதை லயிக்க விடாதே படிப்பு உண்டு உன் வேலை உண்டு என்று இருக்கவேண்டும். நம் தந்தை இறக்கும்பொழுது சொன்ன வார்த்தைகளை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டிரு. நம் தந்தையின் கனவை நீதான் நிறைவேற்ற வேண்டும். பணத்தைப் பற்றி கவலைப்படாதே. உனக்கு தேவையானபொழுது எழுது அனுப்பி வைக்கிறேன். அன்புள்ள அண்ணன், நடராஜன். கடிதத்தை படித்து முடித்த சேகர் கண்முன் பழைய சம்பவங்களெல்லாம் வந்து நின்றன. எதில் தவறினாலும் படிப்பில் மட்டும் தவறவோ தரவோ கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டான். . கல்லூரியிலே படித்த மாணவர்கள் சூட்டும் கோட் டும் போட்டு டிப்டாப்பாக' இருந்தார்கள். அவர் களோடு பழகிற சேகர்தான் சாதாரண நாட்டுப்புறத் தானைப்போல இருப்பது கௌரவக் குறைவு, நாகரீகமற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/21&oldid=1740982" இலிருந்து மீள்விக்கப்பட்டது