பக்கம்:தந்தையின் ஆணை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைந்தம்பி 23 ஓர் வெறுப்பு வாடகைக்கு வீடு தர எல்லோரும் மறுத்துவிட்டனர். நாடாரின் தயவால்தான் ஒரு சிறு வீடு மார்வாடிக்கு வாடகையாக அமைந்தது. ஆரம் பத்தில் 'பலகாரக்கடை வைத்த அந்த மார்வாடி பணம் கொடுக்க ஆரம்பித்து, தான் குடியிருந்த வீட்டையே ஒன்றுக்குப் பாதியாக கிரயத்திற்கு வாங்குமளவு வளர்ந்து விட்டான். அதோடு மட்டுமா? இன்னும் பல புலன்களுக்கும் நாளடைவில் எஜமானாகி விட்டான். பாவம் அந்தப் பட்டிக்காட்டு மக்களால் வட்டி கூட கொடுக்க முடியாமல் தங்கள் ஆஸ்தியை எழுதிக் கொடுக்கலாயினர். நில நடராஜனிடமும் தேன் ஒழுக பேசினானே தவிர வட்டியை குறைக்கவோ, வசூலிக்கவோ தவறவில்லை. நடராஜனும் எப்படியோ கஷ்டப்பட்டு வட்டியை மாத்திரம் தவறாமல் கட்டி வந்தான். தன் தம்பி குமாரின் பலசரக்கு மளிகையில் இருந்தும், தன் சம்பளத்தில் இருந்தும் கொஞ்சம் மீதப்படுத்தி வட்டிக்குச் செலுத் தினான். மீதி தேவையானபோது தன் இளைய தம்பி மாணிக்கம் படிப்பிற்கும் சேகருக்கும் கடன் வாங்கி வந்தான். . அன்று தைப் பொங்கல். தமிழர் திருநாள். தன் தம்பி மாணிக்கத்திற்கு நல்ல சொக்காயும் சட்டையும் தைத்து, தனக்கும் தன் தம்பி குமர்ருக்கும் சாதாரண வேஷ்டியும் சட்டையும் வாங்கிக்கொண்டு. இரண்டு நாட்டுச் சேலையும், ஒரு நல்ல உயர்ந்த நூல் சேலையும், மற்றொரு சில்க் சேலையும் நடராஜன் வாங்கி வந்தான். அன்று எல்லோரும் புத்தாடை கட்ட வேண்டும் என்பதற்காக சேகர் மனைவி லீலாவை அழைத்து சில்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/24&oldid=1740985" இலிருந்து மீள்விக்கப்பட்டது