பக்கம்:தந்தையின் ஆணை.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தந்தையின் ஆணை சேலையையும், குமார் மனைவி லட்சுமியை அழைத்து நல்ல நூல் சேலையையும் நாட்டுச் சேலை ஒன்றை தன் தாயாருக்கும். மற்றொன்றை தன் மனைவி பார்வதிக்கும் நடராஜன் பிரித்துக் கொடுத்தான். எல்லோரும் சேலையை வாங்கிக் கொண்டனர். நட ராஜன் மனைவி பார்வதி மட்டும் சக்தி பெரிதா ? சிவன் பெரிதா?" என்ற பிரச்னையைக் கிளப்ப ஆரம்பித்தாள். 'இது என்ன ? எடுத்தால் எல்லோருக்கும் ஒரே ரகமான சேலை எடுக்கவேண்டும்; இல்லாவிட்டால் எடுக்காமல் இருக்கவேண்டும் ; ஒருத்திக்கு சில்க், இன்னொருத்திக்கு நல்லது எனக்கு மட்டும் மோசமா?- என்று கூறி பாத்யதைப் போராட்டத்தை அன்று ஆரம்பித்தாள். அதைப் பார்த்த நடராஜன் சிரித்துக்கொண்டே அடி அசடே ! நீ தானே வீட்டுக்குப் பெரியவள்! ..

  • 4

அதற்காக குப்பைச் சேலையைக் கட்டுவதா 1" இந்த பாரு, லீலா இப்ப வந்தவ வயசுப்பொண்ணு. நீ என்ன இருந்தாலும் கிழவி தானே? இப்படி பலவாறாகச்சொல்லி பார்வதியை நடராஜன் திருப்திபடுத்தினான். குடும்பத்தில் ஏதாவது 'கோளாறு‘ ஏற்பட்டால்...அதை சாமர்த்தியமாக சமாளித்து நிர்வகித் தான் நடராஜன். பல வீடுகளிலே மாமியும் மருமகளும் கீரியும் பாம்பு மாக இருப்பதுபோல் நடராஜன் வீட்டில் இருப்பது இல்லை. வள்ளியம்மாள் மருமகளிடம் மிகவும் அன்பாக நடந்து வந்தாள். $ துவாக மருமகளுக்கு 'மாட்டுப்பெண் என்ற பட்டம் உண்டு. அதாவது புருஷன் வீட்டிற்கு மாடு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/25&oldid=1740986" இலிருந்து மீள்விக்கப்பட்டது