பக்கம்:தந்தையின் ஆணை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசைத்தம்பி 25 போல் உழைக்கவந்த பெண் என்று அர்த்தமாம்! மாடு போல பாடுபட்டு மாமியையும் மணாளனையும் மகிழ்விக்க வேண்டியது மருமகள் கடமை என்ற மடமையான கருத்து பல மங்கையர்களிடம் உண்டு. கல்யாணம் என் பது வீட்டு வேலைசெய்ய ஒரு பெண்ணை விலைக்கு வாங்கு வது என்று எண்ணுகிறநிலை இன்னும் இருக்கத்தான் செய் கிறது. மருமகள் வீட்டுக்கு வந்ததும் அதுவரை வேலை வெட்டி பார்த்த மாமி. தான் ஓய்வு எடுத்துகொண்டு ஒய்யாரமாக இருந்து மருமகளை வாட்டி வதைப்பதும் இன்று நாட்டிலே நடக்கத்தான் செய்கிறது. வள்ளியம் மகள் அப்படிப்பட்டவளல்ல. தன் மருமகள் செய்கிற ஒவ்வொரு வேலையிலும் பங்கு பெற்றுவந்தாள். எனவே நடராஜன் வீட்டிலே மாமி மருமகள் தகராறு ஏற்படவே இல்லை இடையிடையே நடராஜன் மனைவி பார்வதி ஏதா வது சண்டித்தனம் செய்வாள். நயத்தாலும் பயத்தாலும் அதை நடராஜன் சரிப்படுத்திக்கொண்டு குடும்பத்தை ஒற்றுமையாக நடத்தி வந்தான். சேகரையும் அடிக்கடி ஊக்குவித்து கடிதம் எழுதினான் நடராஜன். இந்த சமயத்தில் நடராஜனுக்கு அடுத்தவனான குமா ருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு தேவ ராஜன் என்று தன் தந்தையின் பெயரை வைத்தார்கள். தேவராஜன் பிறந்த செய்தி சேகருக்கு அறிவிக்கப்பட்டது. 9. கிளர்ச்சி சேகருக்குப் படிப்பதிலே எவ்விதக் கஷ்டமும் இருந்ததே இல்லை. கேள்வி ஞானத்திலேயே சகலவற் றையும் அறிந்து கொள்ளும் சக்தி சேகருக்கு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/26&oldid=1740987" இலிருந்து மீள்விக்கப்பட்டது