பக்கம்:தந்தையின் ஆணை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.. ஆசைத்தம்பி ஏன் என் கூடவே இருந்து விடுங்களேன்? கலாம். .. .. 33 அதற்கென்ன பரீட்சை ரிசல்ட் வரட்டும் பார்க்

  • பரீட்சை பாசாகி விட்டால்?..."

.“ உன் டிஸ்பென்சரியில் நான் ஓர் ஊழியன்!" •• கேலிதான் !... சேகர்! இருவரும் சேர்ந்து ஒரு பெரிய டிஸ்பென்சரி வைக்க வேண்டும். ஏழை பணக் காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் உதவ வேண்டும். விசேஷமாக கிராம மக்களுக்காக அதிக நேரத்தை செலவிட வேண்டும். ஓ! அப்படியே செய்யலாம்." இந்த முடிவோடு இருவரும் இரயில் ஏறினர். இரயிலிலும் வெகு நேரம் வரை இருவரும் எதிர்காலத்தில் செய்யவேண்டிய வேலைகளைப்பற்றி பேசினர். மறுநாள் காலை மதுரை வந்தது. அங்கே இருவரும் காப்பி சாப் பிட்டனர். வண்டியும் விருதுநகரை நோக்கி புறப்பட் டது. திருமங்கலம் வர பத்து மைல்கள்தான் இருந்தன. நளினா புதிதாக வாங்கிய பிடிலை கையில் எடுத்தாள். "சேகர்!... நீங்கள் என்னை மறந்துவிடாமல் இருக்க -உங்கள் சங்கீத ஞானம் நாளுக்கு நாள் வளர - இந்த பிடிலை' பரிசளிக்கிறேன், ஏற்றுக்கொள்ளுங்கள்." < - 'நளினா!... இந்த அனாதைக்கு இது எதற்கு?" ஆதரவு தர சேகர் !...சஞ்சலம் ஏற்படும்போது இதனோடு கொஞ்சுங்கள்! சங்கீதம் சாந்தியை தரும்.' "நளினா ! நீ செய்த ஒவ்வொரு உதவியையும் உயிருள்ள வரை மறக்க மாட்டேன்." சேகர் பிடிலை பெற்றுக்கொண்டு பெட்டியினுள் வைக்கப் போனான். அப்போது நளினா தடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/34&oldid=1740996" இலிருந்து மீள்விக்கப்பட்டது