பக்கம்:தந்தையின் ஆணை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தந்தையின் ஆணை சேகர்! இந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நம் இருவரைத் தவிர ஒருவரும் இல்லை. ஏன் உள்ளே வைக்கப்போகிறீர்கள்? பிடிலை மீட்டி வாசியுங்கள்! நளினாவின் வேண்டுகோளை சேகரால் தட்ட முடிய வில்லை. யாழ் மீட்டி வாசிக்க ஆரம்பித்தான்; அனுபவித்து கேட்க ஆரம்பித்தாள் நளினா. திருமங்கலம் வந்தது. "ஊர் போனதும் உடனே கடிதம் போடுங்கள் என்று கூறி பிரிய முடியாமல் பிரிந்தாள் நளினா. 19 . 12. கனவும் காட்சியும் " . R அதை ஆனால் திருமங்கலத்தை வீட்டு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. மறையும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் கைகளை ஆட்டி குட்பை' சொல்லிக்கொண் டனர். ரயில் வேகமாக சென்றது. காற்று விர் விர் என்று புயல் போல் அடித்தது. சேகர் மனமும் அப் போது அப்படித்தான் இருந்தது. இரயிலின் வேகத்தை விட அவன் மனம் கடந்த காலத்தை நோக்கிக் கடுமை யான வேகத்தோடு சென்றது. அங்கே சேகர் பிடில் வாசித்தான். நளினா பதம் பாடிக்கொண்டே ஆடினாள்; அப்புறம் நளினா அயர்ந்து விட்டாள்; அவர் அயர்ச்சியை தீர்க்க, உணர்ச்சிமிக்க ஒரு பாடலை சேகர் பாடினான். இந்த நினைவு பூரணமாக் வருவதற்குள் விருதுநகர் வந்து விட்டது. பக்கத்து ஊரான பாலைவனம் செல்ல ஓரு 'ஜட்காவை' வாடகை பேசி புறப்பட்டான் சேகர். சேகரை அவன் மனைவி லீலா மாலை போட்டு வர வேற்றாள்; இருவரும் ஆனந்தமாக கட்டித் தளுவிக் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/35&oldid=1740997" இலிருந்து மீள்விக்கப்பட்டது