பக்கம்:தந்தையின் ஆணை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தந்தையின் ஆணை இப்படிக் கூறிக்கொண்டே நளினா அவனுக்கு முன் னால் சென்றாள். சேகர் பேசவில்லை; அவன் கண்களில் இருத்து வழிந்த கண்ணீர்த் துளிகள்தான் பேசின ! I உன்மேல் குற்றமில்லை நளினா! நான் வந்திருக்கக் கூடாது. இல்லை. வரவேண்டும்: வருகிறேன் என்று அறி வித்திருக்க வேண்டும். இரயிலடிக்கு வந்து நான் வர வேற்றிருக்கவேண்டும். பதில் சொல்ல சேகர் வாயைத் திறந்தான்; ஆனால் நளினா பேச விடவில்லை. உள்ளே அழைத்துச் சென் றாள் : குளிக்கச் செய்தாள்: நாகரீகமாக அலங்கரிக்கச் செய்தாள்: வெகுண்டு பேசிய வேலைக்காரி, சுருண்டு ஒடுங்கி காலைப் பலகாரத்தை இருவருக்கும் பரிமாறினாள். சாப்பிட்ட பின் இருவரும் சோபாவிலே உட்கார்ந்தார்கள். ஆமாம் தங்களின் இந்த நிலைக்குக் காரணம்!' நான் தான் அனாதை என்று முன்னமே சொன் பின்னே.

  • .*

புத்திசாலித்தனமாக பொய் சொன்னான் சேகர்.

  • உங்கள் தாய் தந்தையின் வரலாறுதான் என்ன?

“நான் தவழும் பருவத்திலேயே பரலோகம் போய் விட்டார்கள்.' இந்தப் பொய்யைக் கூறும்போது சேகர் கண்கள் கலங்கின : இதை நளினா கண்டு விட்டாள்; மேற் கொண்டு எதுவும் கேள்வி கேட்க அவள் விரும்பவில்லை. சேகர் ! இனி நீங்கள் எங்கும் போகக் கூடாது. இங்கேயே இருக்க வேண்டும். நமது கனவு நனவாகும் காலம் வந்து விட்டது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/55&oldid=1741017" இலிருந்து மீள்விக்கப்பட்டது