பக்கம்:தந்தையின் ஆணை.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தந்தையின் ஆணை பிரபல டாக்டர்கள் எல்லாம் சேகரைப் புகழ்ந்தார்கள். சேகருக்கு வந்த பெருமை தனக்கு வந்ததாக நினைத்து மகிழ்ந்தாள் நளினா. அந்தக் கண் மருந்து நளினாவையும், சேகரையும் லட்சாதிபதிகளாக்கியது. பங்களா வாசிகளாக்கியது. " கார்கள் வைத்திருக்கும் கனவான்களாக்கியது. ஆனால்- 19. பிள்ளையோ பிள்ளை ! வள்ளியம்மாள். நடராஜன், குமார், மாணிக்கம் ஆகியவர்கள் வாழ்க்கையில், நாளுக்கு நாள் வறுமையின் வேகம் அதிகரித்ததே தவிர, வேறு எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. வள்ளியம்மாளும், லீலாவும் ஒருவர் மாறி ஒருவர் படுக்கையிலே படுப்பதும், எழுந்து நடமாடுவதுமாக இருந்தனர். வருமானத்தின் கால் பாகத்தை வைத்திய செலவு மாதா மாதம் விழுங்கிக்கொண்டு வந்தது. நடராஜன் பேய் பிடித்தவனைப்போல எந்த நேரமும் மெளனி யாக காட்சியளித்தான். லீலாவும், தன் தாயா ரும் படும் வேதனை அவனை மேலும் பைத்தியமாக்கியது. இளையவனான மாணிக்கம் ஒருவன்தான் துள்ளிக் குதித்தாடும் பள்ளி வாழ்க்கையிலே மிதந்துகொண்டிருந் தான். அதுவும் விருதுநகர் பள்ளிக்கூடத்திலே சம்பளம் இல்லாதிருந்ததினால்தான் அந்த பாதையில் கல்லாக ஒன்றும் இருக்க முடியவில்லை. தடைக் குமார் சிறிய பலசரக்குக் கடையைக் கட்டிக் கொண்டு தினமும் மாரடித்தான் ரூபாய்க்கு இரண் டணா கூட கிடைப்பது கஷ்டம். அதிலும் கிராமத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/63&oldid=1741025" இலிருந்து மீள்விக்கப்பட்டது