பக்கம்:தந்தையின் ஆணை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66

தந்தையின் ஆணை பிள்ளை ஆசைகொண்ட பார்வதி இந்த சாமியாரைக் காண விருதுநகர் வந்தாள்; அதற்குள் அந்த சாமியாரை பித்தலாட்டக்காரன் என்று உணர்ந்துகொண்ட விருதை மக்கள். பாதுகா பட்டாபிஷேகம் செய்து விரட்டிவிட்ட தாகக் கேள்விப்பட்டாள். அவளுக்கு மிகவும் வருத்த மாய் இருந்தது. ஆனால் - ஆறுதல் ஏற்படுகிறாப்போல, அருப்புக் கோட்டையிலே ஒரு மந்திரவாதி இருப்பதாகவும்.அவ னிடம் போன உடனே எதற்காக வந்திருக்கிறோமென்று சொல்லிவிடுகிறான் என்றும் பார்வதி கேள்விப்பட்டு அருப்புக்கோட்டை சென்றாள். முப்பது ரூபாய் கொண்டுவாருங்கள் ஒரு 'தாயத்து செய்து தருகிறேன் : அதை போட்டுக்கொண்டால் அடுத்த மாதமே கர்ப்பமாவீர்கள் என்றான் மந்திரவாதி. பார்வதிக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. வீட்டுக்கு ஓடோடி வந்தாள் : பணம் எடுக்க பெட்டி அருகே விரைந்து சென்றாள்; ஆனால் திகைத்து நின்றாள். பணப்பையைக் காணோம் என்றதும். இதில் இருந்த பணப்பை எங்கே? தன் கணவரே எடுத்திருப்பாரா, தன் தம்பிக்கு கொடுக்க? அவ்வளவு துரத்திற்கு ஆளாகிவிட்டாரா? பார்வதி பத்ரகாளியாகி விட்டாள்! வேகமாக வந்தாள்; கன்னத்திலே கை வைத்துக்கொண்டு கணவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். "எனக்கு தெரியாமல் இப்படி பணத்தை எடுக்க எத்தனை நாள் காத்திருந்தீர்கள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/67&oldid=1741029" இலிருந்து மீள்விக்கப்பட்டது