ஆசைத்தம்பி 71 அண்ணா! நீ தனியாகப் போகக்கூடாது! பிரிந்து போகக்கூடாது...அண்ணா! அன்று சேகர் அண்ணா போய்விட்டார் ! இன்று நீ ! நாளை என் கதி என்ன அண்ணா?... இப்படியே நீங்கள் ஒவ்வொருவரும் வீட்டை விட்டுப் போய்விட்டால் .. நானும், அம்மாவும் எங்கே போவது? வேண்டாம் அண்ணா 1 நம் குடும்பம் சீரழிய வேண்டாம்! என்னோடு வா அண்ணா! வீட்டுக்குப் போகலாம்!” மாணிக்கத்தின் அழுகுரலைக்கேட்டு குமார் மனம் இளகிப்போய், என்ன செய்வதென்று அறியாமல் தயங்கி நின்றான். அப்போது வீட்டுக்குள்ளே இருந்த லட்சுமி தன் கணவனை உள்ளே வரும்படி அழைத்தாள். குமார் உள்ளே செல்ல முயர்ச்சித்து கால்களை தூக்கி வைத்தான்: ஆனால் மாணிக்கம் விடவில்லை. முன்னே போய் நின்று கொண்டு தடுத்தான்' "அண்ணா ! நீ வீட்டுக்குள் போகக்கூடாது உன்னை விடமாட்டேன்,' " என்று மாணிக்ம் கூறிக்கொண்டிருக் கும்போது மீண்டும் லட்சுமி குமாரை அழைத்தாள், குமார் நகர ஆரம்பித்தான்; மாணிக்கம் வாசல் நடுவே கால் நீட்டி படுத்துவிட்டான். அண்ணா! என் பேச்சை கேட்காமல் நீ வீட்டுக் குள்ளே போவதென்றால் என்னைக் கொன்றுவிட்டு போ! இப்படி உறுதியாகவே மாணிக்கம் கூறினான்: பித் துப்பிடித்தவனைப்போல குமார் நின்றுவிட்டான்; அவன் தலை சுழன்றது. 'உம்! வாருங்கள் உள்ளே இருந்தபடியே கூறினாள் லட்சுமி! குமார் அசையாமல் நிற்பதைப் பார்த்து, எட்டி கையைப்
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/72
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை