பக்கம்:தந்தையின் ஆணை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தந்தையின் ஆணை வள்ளியம்மாள். ஆசையோடு இப்படி கேட்டாள். நடராஜன் பதில் சொல்லவேயில்லை: லீலா கலங்கினாள் தாய் பாசம் லேசானதா? மீண்டும் துளவினாள் வள்ளி யம்மாள்.

அம்மா! அவனைப்பற்றி என்னிடம் பேசாதே! சேகர் செத்துவிட்டான் என்று நினைத்துக்கொள்.' " நடராஜனின் இந்த பதிலைக் கேட்டதும் வள்ளியம் மாளுக்கு 'பகீர்' என்று இருந்தது' லீலா மயங்கி கீழே விழுந்தாள். வள்ளியம்மாள் ஓடிப்போய் லீலாவைத் தூக்கினாள். அப்போது ஒருவன் வீட்டுக்குள் ஓடி வந்தான். - ஐயோ ! தீ! தீ! உங்க குமார் வீட்டிலே தீ பற்றி எறிகிறது. ஓடிவந்தவன் கூறியதைக் கேட்ட நடராஜன் சுய உணர்வு பெற்றான். என்ன? என் தம்பி வீட்டில் தீயா? குமார்! குமார்!" இப்படி கத்திக்கொண்டே நடராஜன் ஓடினான். குமார் வீடு தீ பற்றி ஜுவாலை விட்டு எரிந்து கொண் டிருந்தது. குமாரும் அவன் மனைவி லட்சுமியும் வெளி யில் நின்று அலறிக்கொண்டிருந்தார்கள். ஐயோ என் குழந்தை உள்ளே சிக்கிவிட்டதே ! காப்பாற்றுவார் இல்லையா? லட்சுமியின் இந்த கதறல் நடராஜன் காதில் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தந்தையின்_ஆணை.pdf/81&oldid=1741043" இலிருந்து மீள்விக்கப்பட்டது