86 தந்தையின் ஆணை இப்படி நளினா கூப்பிட்டதும் அக்கட்டிடமே அதிர்ந்தது. • நளினா ! நளினா!" சேகர் ஓடிப்போய் நளினாவைத் தூக்கி மடியில் வைத்தான். .. . போங்கள்! வருகிறேன்' நளினாவின் கடைசி வார்த்தைகள் ! ' போங்கள் வரு கிறேன் இந்த வார்த்தைகளை அந்தக் கட்டிடம் எதி ரொலித்துக்கொண்டே. இருந்தது. நளினா ! போகிறேன்! நீ போகாதே! - சேகர் அலறினான். அலறினான்! ஆனால் அமைதி யான இடத்திற்கு நளினா போய்விட்டாள். 25. கனவு நனவாயிற்று! கண் வள்ளியம்மாள் காரிலே ஏறி உட்கார்ந்தாள்: ணீர் தோய்ந்த கண்களோடு சேகர் விரைந்து ஓட்டினான், பாலைவனம் நோக்கி, சேகர் காரைவிட்டு வீட்டுக்குள் நுழைந்ததும். லீலாவுக்கு ஒரே ஆனந்தம். ஆனால் மெய்மறந்து கண் ணீர்விட்டு நின்றாள். கிராம மக்கள் எல்லோரும் சேக ரைப் பார்த்து ஆச்சர்யமடைந்தனர். நடராஜனுக்கு வேண்டிய சிகிச்சை செய்தான் சேகர். தான் அற்பு தமாக கண்டுபிடித்த மருந்தையும் நடராஜனுக்கு உபயோகப்படுத்தினான். நடராஜனின் உருவம் தெரியாமலே கட்டுகள் கட்டப்பட்டிருந்தன. வள்ளியம்மாள் வீட்டில் சேகர் வந்த தினத்தில் இருந்து இன்பம் பொங்க ஆரம்பித்தது. பிரிந்து சென்ற குமார் ஒன்றாக வந்து சேர்ந்தான். நாட்கள் கடந்தன. .
பக்கம்:தந்தையின் ஆணை.pdf/87
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை