பக்கம்:தந்தையின் காதலி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாகோவ் அன்று அதிகாலையிலேயே எழுந்து விட் டான். அவன் எழுந்த வேளையில், சூரிய உஷ்ணம் உறைக்க ஆரம்பிக்கவில்லே , கடலிலிருந்தும் புதிய காற்று வீசிக் கொண்டிருந்தது. அவன் கடலில் குளிக்கப்போஞன் அப் போது கடற்கரையில் மால்வாவைப் பார்த்தான். அவள் கரைமீது தள்ளப்பட்டிருந்த ஒரு தோணியின் முகப்பில் உட் கார்ந்து, ஈரத் தலை மயிரைச் சிவிச் சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். உறைகள் அணியாத அவளது கால்கள் தோணியின் விலாப்புறத்தில் ஊசலாடிக்கொண் டிருக்தன.

யாகோவ் சடக்கென்று கின்று, அவளைக் கூர்ந்து பார்த்தான்.

மால்வாவின் ரவிக்கை, அவளது மார்பாகத்தின் முன் பொத்தான் மாட்டாIBல் கழன்று, தோள்பட்டைப் பக்க மாக கழுவிக் கிடந்தது. திறந்து கிடந்த அந்தத் தோள் வெண்மையாக, உணர்ச்சி வெளியூட்டுவதாக இருந்தது. கடலலைகள் தோணியின் முகப்பில் சாடி மேலோங் கித் தாக்கின. எனவே அதன் முனையிலிருந்த மால்வாவும் கடலுக்கு மேலாக உயர்ந்து போனுள் அலை தாழும் போது அவளும் தாழ்ந்தாள். அப்படித் தாழும்போது அவளது பாதங்கள் கடல் நீரைத் தொடுவது மாதிரித் தோன்றியது.

  • நீ குளிச்சிட்டியா ?? என்று யாகோவ் அவளைப் பார்த்துச் சத்தமிட்டான்.

அவள் முகத்தைத் திருப்பி அவனைப் பார்த்தாள் ; ஒரே வீச்சில் அவனேக் கண்டுகொண்டாள். பிறகு தன் தலையைச் சிக்கெடுத்துக்கொண்டே, அவனுக்குப் பதில் சொன்னுள் :

"ஆமாம்.நீ ஏது காத்தாலேயே வந்திட்டே?” * கீ எனக்கும் முன்னுடி வந்திட்டியே!” 8 "என்னை மாதிரி நீயும் கடந்துக்கணுமா ?" யாகோவ் பதில் பேசவில்லை.