பக்கம்:தந்தையும் மகளும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

தந்தையும்

கொண்டே எரியும், காற்று கொஞ்சமும் இல்லாவிட்டால் எரியாமல் அணைந்து போகும். இது எல்லாம் நீ அறிவாய். தீ நன்றாக எரியாமல் புகையும் போது அதை நன்றாக எரியுமாறு செய்வதற்காகக் குழல் மூலம் ஊதுவார்கள், அல்லது விசிறி கொண்டு விசிறுவார்கள். போதுமான காற்று கிடைத்தால் விறகிலுள்ள கரி காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயுவாக ஆகும். அந்த வாயு கங்குடன் சேர்ந்து கார்பன் மானாக்ஸைட் என்னும் வாயு உண்டாகிறது. அதுதான் பிராணவாயுவுடன் சேர்ந்து நீல நிறமாக எரிகிறது.

அத்துடன் விறகில் இருப்பது கரி மட்டுமன்று வேறு பல பொருள்களும் உள. அவைகளும் வாயுக்களாக மாறுகின்றன. அவையும் பிராணவாயுவுடன் சேர்ந்து நீல நிறமாக எரியும்.

102அப்பா! இரும்பைக் கூட எரியும்படி செய்ய முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஒரு வஸ்து எரிய வேண்டுமானால், அது பிராணவாயுவுடன் சேர வேண்டும். அப்படிப் பிராணவாயுவுடன் சேர்வதையே “எரிதல்” என்று கூறுகிறோம். கடுதாசி, திரி போன்ற வஸ்துக்களில் தீக்குச்சி கிழித்து வைத்தால் எரிய ஆரம்பித்துவிடும். ஆனால் இரும்பைத் தீயில் வைத்துக் காய்ச்சினாலும் எரிவதில்லை.

ஆனால் இரும்பு எரியவே செய்யாது என்று எண்ணாதே. தீக்குச்சி கிழித்து வைக்காமல் கூட அது எரியவே செய்கிறது. இரும்பின் மீது ஈரமான காற்றுப் பட்டால் அப்போது இரும்பு பிராணவாயுவுடன் சேர்கிறது. அதைத்தான் துரு என்று கூறுகிறோம். ஆனால் உஷ்ணமோ ஒளியோ உண்டாவதில்லை.