பக்கம்:தந்தையும் மகளும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

105

ஆயினும் விஞ்ஞானிகள் காற்றைக் குளிர்ப்பித்துத் திரவமாக ஆக்கிவிடுகிறார்கள். அந்தக் காற்று திரவமுள்ள பாத்திரத்தினுள் மெல்லிய எஃகுக் கம்பியைப்போட்டு தீக்குச்சியைக் கிழித்து வைத்தால் அது உடனே கண்ணைப் பறிக்கும் பொறிகளைச் சொரிந்து கொண்டு அழகாக எரியும்.

103அப்பா! !அலுமினியப் பாத்திரங்களில் துரு உண்டாவதில்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அது உண்மைதான், ஆனால் உனக்குத் துரு என்றால் என்ன என்று தெரியுமோ? இரும்பின்மீது ஈரமான காற்றுப் பட்டால் அப்பொழுது இரும்பு காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து ஒரு புதுப்பொருளாக மாறுகிறது. அது சிவப்பு நிறமாயிருக்கும். அதைத்தான் துரு என்று கூறுவார்கள்.

அதுபோல் அலுமினியத்தின் மீது ஈரமான காற்றுப்பட்டால் அதுவும் பிராணவாயுவுடன் சேரவே செய்கிறது. இரும்பு சேர்வதைவிட அதிகமாகக் கூடச் சேர்வதாகச் சொல்லலாம். ஆனால் இரும்பில் துருப்பிடித்தால் அந்தத் துரு உண்டாக உண்டாக அடர்ந்து விழுந்துகொண்டேயிருக்கும். அதனால் துருவும் மறுபடியும் மறுபடியும் உண்டாய்க்கொண்டே வரும். ஆனால் அலுமினியம் பிராண வாயுவோடு சேர்ந்தால் அந்தப் புது பொருள் அடர்ந்து வராமல் ஒட்டிக்கொள்கிறது. அதனால் மறுபடியும் பிராண வாயுவுடன் சேர இடமில்லாமல் போகிறது. ஆதலால் அலுமினியப் பாத்திரம் முதலில் இருந்த பளபளப்புக் குறைந்தாலும் இரும்பு மாதிரி துருப் பிடித்துக் கெட்டுப்போவதுமில்லை, அழகில்லாமல் ஆகிவிடுவதுமில்லை.

104அப்பா! சில பவுண்டன் பேனாக்களில் மை அடைப்பதற்கு வேண்டிய கருவி அதிலேயே இருக்கிறது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?