பக்கம்:தந்தையும் மகளும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

தந்தையும்

கேட்பார். அப்பொழுது மணி உருவமான பாகம் உடலில் உண்டாகும் ஒலியை அதிகச் சப்தமாகப் பெருக்கி டாக்டருக்கு நன்றாகத் தெளிவாகக் கேட்கும்படி செய்யும்.

இந்தக் கருவியைக் கண்டு பிடித்தவர் ரெனே லேனக் என்னும் பிரஞ்சு வைத்தியர். அவர் அதை 1816ம் ஆண்டில் கண்டுபிடித்து, 1819ம் ஆண்டில் இன்ன ஒலி கேட்டால் இன்ன நோய் என்று ஒரு பட்டியல் தயாரித்து வெளியிட்டார். இப்பொழுது அது நோய்ப் பரிசோதனைக்கு அதிகப் பயன் தருவதாக இருந்து வருகிறது.

106 அப்பா! சிலர் தெருவில் ஒரு பெட்டியைக் கொண்டு வந்து டில்லி பார் அயோத்தி பார் என்று படம் காட்டுகிறாரே. அந்தப் படங்கள் ஊர்களை நேரில் பார்ப்பது போலவே காட்டுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நமக்கு இரண்டு கண்கள் இருக்கின்றனவே, அவையிரண்டும் எதையும் ஒரே விதமாகப் பார்ப்பதாகவே எண்ணுவாய், அது தவறு. வலது கண்ணானது பார்க்கும் பொருளின் வலது பாகத்தையும் இடது கண்ணானது பார்க்கும் பொருளின் இடது பாகத்தையுமே அதிகமாகப் பார்க்கிறது. ஒருகண்ணை மூடிக்கொண்டு பார் அப்பொழுது நான் கூறுவது விளங்கும். இரண்டு கண்களிலும் விழும் பொருளின் பிம்பங்கள் இரண்டையும் சேர்த்தே நமது மூளையானது ஒரே பொருளாகக் காண்கிறது அதனால்