பக்கம்:தந்தையும் மகளும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தந்தையும்

எரிவது கண்ணுக்குத் தெரியவில்லை. அப்படிப் பிராண வாயுவுடன் சேர்ந்து எரிவதால் தான் அண்ணன் குப்பையை வெட்டியதும் அது சூடாகத் தோன்றுகிறது.

121 அப்பா! மண்ணெண்ணெய் எரிக்கும் விளக்கில் பெட்ரோல் ஊற்றி எரிக்கக்கூடாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றியதும் அந்த உஷ்ணத்தால் திரியில் ஏறி நிற்கும் மண்ணெண்ணெய் ஆவியாக மாறி எரிய ஆரம்பிக்கிறது. அதனால் எவ்வித அபாயமும் உண்டாவதில்லை.

ஆனால் பெட்ரோல் ஆவியாக மாறுவதற்கு அதிக உஷ்ணம் தேவையில்லை. மண்ணெண்ணெய்யைவிட எளிதில் ஆவியாக மாறிவிடும். அதனால் அதை ஊற்றினால் அப்பொழுதே, விளக்குப் பாத்திரத்துக்குள்ளாக ஆவியாக மாற ஆரம்பித்து மாத்திரத்திலுள்ள காற்றுடன் கலந்து நிற்கிறது. அதனால் விளக்கை ஏற்றியதும் பெட்ரோல் ஆவியும் காற்றும் கலந்த கலவைப் பொருளில் உஷ்ணம் பட்டதும் அது வெடித்து அபாயம் உண்டாக்கி விடுகிறது. அதனால் மண்ணெண்ணெய் விளக்கில் பெட்ரோல் ஊற்றி எரிக்கக்கூடாது. அம்மா! நீ எப்போதும் பெட்ரோல் அருகே செல்லாதே. அது அபாயகரமான பொருள்.

122அப்பா! விளக்கை அணைத்தால் அறை முழுவதும் புகை நாறுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்கைப் பற்றியே கேட்கிறாய். மின்சார விளக்கை அணைத்தால் நாற்றம் கிடையாது. எண்ணெய் விளக்கை அணைத்தால் தான் நாற்றம் உண்டாகும். அதற்குக் காரணம் என்ன?