பக்கம்:தந்தையும் மகளும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

தந்தையும்

அது ஆவியாகப் போனபின் கரைந்திருந்த பொருள் தங்கிக் கறையுண்டாகும்? ஆகவே தண்ணீரினால் கறை உண்டாக்க முடியாது. ஆனால் அது சாயப்பொருள்களின் மீது விழுந்தால் அதன் சாயத்தைப் போக்கிவிடும். உன் புஸ்தகத்தின் அட்டை மீது தண்ணீர்பட்டால் அதன் சாயம் இளகிவிடுகிறதல்லவா?

ஆனால் மை பட்டால் கறை உண்டாவதற்குக் காரணம் அதில் நிறமுடைய இரும்பு உப்புக்கள் முதலிய பல பொருள்கள் கரைந்திருப்பது தான். உன்னுடைய பாவாடையில் மை பட்டால் அதிலுள்ள தண்ணீர் உலர்ந்து போனபின் அதில் கரைந்துள்ள சாயப் பொருள்கள் பாவாடையில் தங்கி கறையை உண்டாக்கி விடுகின்றன, அதனால் அம்மா! நீ எழும்போது மை கீறிப்போகாதபடி கவனமாக நடந்து கொள்.

126அப்பா! தண்ணீர் இல்லாமல் ஐஸ் செய்யமுடியுமா?

அம்மா! நாம் கடையில் வாங்கிப் பானங்களில் போட்டுச் சாப்படுகிறோமே, அந்த ஐஸ் முழுவதும் நீர் தான். நீரைத்தான் குளிர்வித்து ஐஸ் கட்டியாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் நீர் இல்லாமல் செய்துள்ள ஐஸ்கட்டியும் உண்டு. நாம் பிராணவாயுவை உள்ளே சுவாசித்து கரியமில வாயுவை வெளியே விடுகிறோம் அல்லவா? அத்தகைய கரியமிலவாயுவைக் குளிர்வித்தால் முதலில் திரவமாகவும் பிறகு கட்டியாகவும் ஆகிவிடும். அது சாதாரண ஐஸைவிட அதிகக் குளிராயிருக்கும். அதனால் அதை உண்டால் மரணம் உண்டாய் விடும்.

சாதாரண ஐஸ் இளகி நீர் ஆவதை நீ அறிவாய்.ஆனால் இந்த ஐஸ சூடு உண்டானால் இளகி திரவமாக மாறாமல் வாயுவாகவே மாறிவிடும். அதனால் தான்