பக்கம்:தந்தையும் மகளும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

131

சோப்புடன் சேர்ந்து அகன்று விடுகின்றன. துணியிலுள்ள சிறு துவாரங்களிலுள்ள எண்ணெய்யும் அழுக்கும் நீங்குவதற்காகத்தான் நாம் துணிகளை சோப் ஐலத்தில் ஊறவைக்கவும் கொதிக்க வைக்கவும் செய்கிறோம்.

சோப் என்பது நம்முடைய நாட்டில் ஆங்கிலேயர் வந்த பின்னரே வழங்கி வருகிறது. அவர்களிடையிலும் அது அதிகமாகச் செய்யப் பெற்றது 1823ம் ஆண்டில் செங்ரெல் என்னும் பிரஞ்சு விஞ்ஞானி சோப் செய்வதன் மர்மத்தை ஆராய்ந்து சொன்ன பிற்பாடுதான்.

ஆயினும் உடம்பிலுள்ள அழுக்கைப் போக்குவதற்காக நம்முடைய நாட்டில் பச்சைப்பயறு மாவை நீண்ட நாளாக உபயோகித்து வந்தார்கள். அது மணமாயிருப்பதற்காக தாமரை பொட்டு, பூலாங்கிழங்கு, வெட்டிவேர் போன்ற சில வாசனைச் சரக்குகளையும் சேர்த்துக் கொள்வார்கள். அதைக் கலவைப் பொடி என்று கூறுவார்கள். இப்பொழுதும் அதை அநேகர் குழந்தைகளுக்கு உபயோகிப்பதுண்டு. சோப்பைவிட அந்தப் பொடியே மிகவும் நல்லதென்று டாக்டர்கள் கூடக் கூறுகிறார்கள்.

சுத்தம் செய்வதற்குச் சோப்பை உபயோகிப்பது போலவே அமெரிக்காவில் சில செடிகளையும் உபயோகிக்கிறார்கள். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டார் மெல்லிய துணிகளைச் சலவை செய்வதற்கு சோப் பட்டை மரம் என்ற மரத்தின் பட்டையைத் தூள்செய்து உபயோகிக்கிறார்கள். நம்முடைய நாட்டிலும் பட்டுத் துணிகளைத் துவைப்பதற்கு பூவந்தி என்ற ஒருவகை மரத்தின் கொட்டையை உபயோர்கள். அதை நெய்க் கொட்டான் மரம் என்று சொல்லுவார்கள்.

132அப்பா! வெள்ளிக்கரண்டியில் முட்டை பட்டால் கறுத்துப்போகும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?