பக்கம்:தந்தையும் மகளும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தந்தையும்

பருத்தித் துணிக்கு உபயோகிக்கும் சோப் விலை குறைவாக இருப்பதால் சிலர் அதையே உடம்பு குளிக்கவும் உபயோகிக்கிறார்கள். அது தவறு.

135அப்பா! கையில் சிவப்புமை பட்டால் சோப்பு அதை நீக்கிவிடுகிறது, ஆனால் சோப்பின் நிறம் மட்டும் மாறாமலே இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! உன் கையில் சிவப்புமை பட்டால் அந்தச் சிவப்பு மை உன் கையின் மேல்தோலில் தானே இருக்கிறது? அதனால்தான் சோப்புககொண்டு கழுவினால் சோப்பினால் அழுக்குப்போவது போல அந்த மையும் போய் விடுகிறது.

ஆனால் சோப்பிலுள்ள நிறம் அதன மேலாகப் பூசி வைக்கப்பட்டதாக இல்லை. அத்துடன் சேர்த்தே செய்யப்பட்டிருக்கிறது. அது உள்ளும் புறமும் சகல பாகங்களிலும் கலந்திருக்கிறது. அதனால்தான் அதை நீக்க முடியவில்லை.

அம்மா! உன் முகத்தில் மஞ்சள் பூசினால் அதைக் கழுவி முகத்தில் மஞ்சள நிறமில்லாமல் செய்துவிடலாம். ஆனால் உன் தங்கக் காப்பை எவ்வளவு தண்ணீர்கொண்டு கழுவினாலும் அது மஞ்சள் நிறம் மாறுமா, மஞ்சளாகவே தானே இருந்து கொண்டிருக்கும்?

136அப்பா! ஐஸ் எப்படிச் செய்கிறார்கள்?

அம்மா! காற்றை அமுக்கினால் அது தன்னிடமுள்ள உஷ்ணத்தைக் கக்கிச் சுற்றுப்புறத்தைச் சூடாக்குகிறது. அப்படி அமுக்குவதை நீக்காவிட்டால் அது உடனே உஷ்ணத்தைக் கிரகித்து சுற்றுப்புறத்தைக் குளிர்ந்து விடச் செய்கிறது இந்தக் குணம் காற்றுக்கு இருப்பது போலவே இதர வாயுக்களுக்கும் உண்டு. அம்மா! இந்தப் படத்தைப் பார். இதுதான் ஐஸ் செய்யும் இயந்திரம். இடது பக்கமுள்ள பாத்திரத்தில்