பக்கம்:தந்தையும் மகளும்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

155

றன. அப்படி அவை செய்யாவிட்டால் பூமி முழுவதும் நாறிப்போகும். எந்தப் பிராணியும் வாழமுடியாது.

சில பாக்டீரியாக்கள் சில செடிகளிள் வேர்களில் இருந்து கொண்டு காற்றிலுள்ள நைட்ரோஜன் வாயுவைக் கிரகித்துச் செடிகளுக்கு உதவுகின்றன. அதனால் நிலம் வளம் அடைந்து பயிர்கள் உண்டாகின்றன.

நமக்குப் பாலைத் தயிராகச் செய்து தருவதும் பாக்டீரியாக்கள் தான். சில பாக்டீரியாக்கள் நம்முடைய குடலில் தங்கி நமக்குக் கேடு செய்யும் பாக்டீரியாக்களைக் கொன்று விடுகின்றன.

ஆகவே கெட்ட கிருமிகள் இருப்பது போலவே நல்ல கிருமிகளும் இருக்கின்றன.

159அப்பா! பிராணிகள் எல்லாம் சதா காலமும் காற்றைச் சுவாசித்தாலும் காற்று இருந்து கொண்டே இருக்கிறதே’ அதற்குக் காரணம் என்ன?

அம்மா! காற்றில் முக்கியமாகக் காணப்படுவன பிராணவாயு நைட்ரோஜன் வாயு, கரியமில வாயு ஆகிய மூன்றும் தான். இந்த மூன்று வாயுக்களும் இடை விடாமல் செலவழிந்து போய்க்கொண்டு தான் இருக்கின்றன. சதாகாலமும் நாமும் மற்றப் பிராணிகளும் பிராண வாயுவைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்; பூமியிலுள்ள மைக்ரோப் என்னும் நுண்ணுயிர்கள் நைட்ரோஜன் வாயுவைக் கிரகித்துக் கொள்கின்றன ; செடி கொடிகள் கரியமில வாயுவைக் கிரகித்து உணவாக்கிக் கொள்கின்றன.

ஆயினும் காற்று எப்பொழுதும் போல் குறையாமலே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் என்ன? சதா காலமும் செடி கொடிகளும் பிராண வாயுவை வெளியே விட்டு பிராண வாயு நஷ்டத்தைப் போக்குகின்றன. பிராணி-