பக்கம்:தந்தையும் மகளும்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

163

ஆம், அம்மா! அது இருப்பது அழகாகவும் இருக்கிறது. ஆனால் அது அழகுக்காக ஏற்பட்டதன்று.

பூனையின் மீசை நீளமாயிருக்கும். அது பகற் காலத்தில் சாய்ந்து முகத்துடன் சேர்ந்தே இருக்கும். தனியாக நீண்டு நிற்காது. ஆனால் இரவிலோ அது தனியாக நிற்க ஆரம்பித்துவிடும். பூனை இருட்டில் நடக்கும்போது, நுழைந்து போகக்கூடிய துவாரம்தான் என்று அது அறிந்துகொள்வதற்கு இந்த நீளமான மீசை உதவுகிறது. அந்த மீசையானது இரண்டு பக்கத்திலும் எதிலும் தொடாமல் இருந்தால் அந்த இடம் பூனையின் உடல் நுழையக்கூடிய அகலமுள்ளதாக இருக்கும். அதைக்கொண்டு பூனை இதில் நுழைய முடியும், இதில் நுழைய முடியாது. என அறிந்து கொள்ளும். அதற்காகத்தான், அம்மா! பூனைக்கு நீளமான மீசைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அது பூனைக்கு அதிகமாகப் பயன்படுவதாயிருந்தாலும் நமக்கு பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறது.

169அப்பா! பூனை சில சமயங்களில் ரோமத்தைச் சிலிர்க்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படிச் சிலிர்க்கும்போது அது பார்ப்பதற்கு பயமாகக்கூட இருக்கும். அந்தச் சமயம் அதனருகில் போகாதே, அது உனக்குக் கெடுதல் செய்தாலும் செய்து விடும். ஆனால் அது ரோமத்தை சிலிர்ப்பது எதற்காக?

அம்மா! நமக்குத் திடீரென்று குளிர் ஏற்பட்டால் நம்முடைய ரோமம் சிலிர்த்து விடுகிறது. ஒவ்வொரு ரோமத்தின் வேருடன் சேர்ந்து ஒரு சின்னஞ் சிறிய தசை இருக்கிறது. அந்தத் தசை சுருங்கினால் உடனே ரோமம் நிமிர்ந்து நின்றுவிடுகிறது.

ஆனால் குளிரில்லாத சமயத்திலும் பூனைக்கு ரோமம் சிலிர்த்திருக்கிறதே என்று கேட்பாய். ஆம். அம்மா ! பூனைக்குச் சிலிர்ப்பதற்குக் காரணம் வேறு. பூனைக்கு ஏதே-