பக்கம்:தந்தையும் மகளும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

175

அப்படி நிற்கும் போது சில கங்காரு ஏழு அடி உயரம் கூட இருக்கும்.

இவ்வளவு பெரிய மிருகமே ஆயினும் அது ஒரு அங்குல நீளமாகவே பிறக்கும். தாயின் வயிற்றினடியில் உள்ள ஒரு பையிலேயே நான்கு மாதங்கள் தங்கியிருந்து வளரும். அந்த நான்கு மாதமும் அதன் வாய் தாயின் மடிக் காம்பைக் கவ்விக் கொண்டிருக்கும. ஆனால் கன்றுக் குட்டி பசுவிடம் பாலை உறிஞ்சிக் குடிப்பது போலக் குடிக்காது பாலே அதன் வாயினுள் பீச்சுவதற்கான தசைகள் தாயிடம் உள இவ்வாறு நான்கு மாதங்கள் வளர்ந்த பின் வெளியே வந்து புல்மேயும்.

183அப்பா! ஒட்டகைச் சிவிங்கி அதிக உயரமாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது ஒட்டகையைவிட உயரமாகவே இருக்கிறது. அது இருபது அடி உயரம் கூட வளரும். அதன் உயரத்துக்குக் காரணம் அதன் கால்களும் கழுத்தும் நீண்டிருப்பதுதான். அதன் முன்கால்கள் பத்து அடி இருக்கும். கழுத்து நீண்டிருந்தாலும் எளிதில் வளைவதில்லை. அதனல் அது கால்களே அகற்றி வைத்துக் கொண்டுதான் தரையிலுள்ள தண்ணிரைக் குடிக்க முடியும்.

அது சாக பட்சணி மாமிசம் தின்னது. அது ஆப்பிரிக்காவில் காணப்படும் பிரதேசங்களில் புல்லுங் கிடையாது. மரங்களின் அடிப்பாகத்தில் கிளைகள் உண்டாவதுமில்லை. ஆதலால் அது மரங்களின் உயர்ந்த கிளைகளிலுள்ள இலைகளேயே தின்று ஜீவிக்க வேண்டியதாயிருக்கிறது. அதனால் தான் அதற்கு நீண்ட கால்களும் கழுத்தும் அமைந்திருக்கின்றன. அதன் நாக்கு ஒன்றரை அடி நீளம் இருப்பதும் இலைகளே எட்டிப் பிடிப்பதற்காகவே.

184அப்பா! நீர் யானைக்கு ரத்தமாக வேர்க்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! யானைக்கு அடுத்தபடி பெரிய மிருகம் அது தான். அது பகல் நேரத்தில் தண்ணிரிலேயே கிடக்கும்.