16
தந்தையும்
சூட்டை நாம் தாங்க முடியும். ஆனால் ஊதாவுக்கு அப்புறமுள்ள கதிர்களால் உண்டாகும் சூட்டை நம்மால் தாங்க முடியாது. ஆனால் அந்தக் கதிர்கள் முழுவதும் நமக்கு வந்து சேர்வதில்லை. பிராண வாயுவின் ஒரு வகையான ஒஜோன் என்னும் வாயு பூமியைச்சுற்றி 25 மைல் தூரம் வரை இருப்பதால் அது அந்த கதிர்களின் பெரும் பாகத்தைக் கிரகித்துக் கொண்டு விடுகிறது. அதனால் தான் நாம் சூரியனுடைய உஷ்ணத்தால் எரிந்து விடாமல் உயிருடன் இருந்து கொண்டிருக்கிறோம்.
2அப்பா! தண்ணீரைச் சேமித்துவைப்பது போலவே சூரிய ஒளியையும் சேமித்து வைக்கலாம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! நாம் உணவு உண்கிறோம். அதிலுள்ள மாப்பொருள் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவுடன் சேர்கிறது. அதனாலேயே நம்முடைய உடம்பில் உஷ்ணமும் சக்தியும் உண்டாகின்றன. இப்படி உணவு நமக்குச் சக்தி தருகிறதற்குக் காரணம் செடிகள் சூரிய ஒளியை உணவுப்பொருள்களில் சேகரித்து வைப்பதேயாகும். சூரிய ஒளியில்லாவிட்டால் செடிகளிலுள்ள இலைகள் கரியமிலவாயுவைச் சுவாசித்து அதிலுள்ள கரியைக் கிரகித்து மாப்பொருளாகச் செய்ய முடியாது என்பதை நீ அறிவாய் அல்லவா?
இவ்வாறு செடியானது சூரிய ஒளியை உணவுப்பொருள்களில் சேகரித்து வைப்பது போலவே, தன்னுடையசகல உறுப்புக்களிலும் சேகரித்து வைக்கிறது. அதனால் தான் விறகும் நிலக்கரியும் எரிந்து நமக்குப் பல காரியங்களைச் செய்யக்கூடிய சக்தியுடையனவாக இருக்கின்றன.
ஆகவே நாம் செடிகளை உண்டாக்கி சூரிய ஒளியைச்சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு அதை நமக்குவேண்டிய சமயங்களில் உபயோகித்துக் கொள்ளலாம்.