பக்கம்:தந்தையும் மகளும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தந்தையும்

ஆனால் ஓட்டகமோ, பாலைவனத்தில் செல்வதற்கு அதுதான் ஏற்ற மிருகம். பாலைவனத்தில் சூரியன் வெகுகடுமையாகப் பிரகாசிக்கும். அதைத் தாங்குவதற்கு ஏற்றவண்ணம் ஒட்டகத்தின் இமைகள் நீளமாக அமைந்து கண்ணைக் கூசாதபடி பாதுகாக்கின்றன. பாலைவனத்தில் அடிக்கடி காற்றுக் கிளம்பி மணற் புயல் உண்டாகும். அப்பொழுது மூக்குத் துவாரங்களை மூடிக்கொள்வதற்குத் தகுந்தவாறு சாய்வாக அமைந்திருக்கிறது ஒட்டகத்தின் மூக்கு. அதன் பாதம் இரண்டு பிளவாக இருப்பதால் மணலில் மிதிக்கும் போது பாதம் விரித்து சாயவிடாமல் தடுத்துவிடுகிறது.

ஒட்டகம் எதையும் தின்னும் விஷம்கூட அதைக் கொல்லாது. பாலைவனத்தில் முட்செடிகள் தான் கிடைக்கும். அத்துடன் அது பல நாட்களுக்கு உணவும் நீரும் இல்லாமல் ஜீவிக்க முடியும் அப்படி அது பட்டினியாயிருக்கும்போது அதன் திமிலில் உள்ள கொழுப்பு உணவாக உதவும். அதன் வயிற்றில் ஒரு வாரத்துக்கு வேண்டிய தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.

இந்தக் காரணங்களால்தான் பாலைவனத்தில் பிரயாணம் செய்ய ஒட்டகத்தை உபயோகிக்கிறார்கள்.

188அப்பா! உலகத்தில் மரஞ்செடிகள் உண்டான பிறகு தான் மிருகங்கள் உண்டாயின என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மிருகங்களுடைய உணவைக் கவனித்தால், அது செடியிலிருந்தோ அல்லது செடியிலிருந்து உணவு பெற்ற மிருகங்களிலிருந்தோ வந்ததாகவே இருக்கிறது.

ஆனால் செடிகளோ அவைகள் உணவு பெறுவதற்கு வேறு செடிகளோ மிருகங்களோ தேவையில்லை. செடிகள் தங்களுக்கு வேண்டிய உணவைக் காற்றிலிருந்தும் மண்ணிலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன.

-