பக்கம்:தந்தையும் மகளும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

தந்தையும்

மரஞ்செடிகளுக்கு வேரினால் என்ன உபயோகம் என்று தெரியுமா? அதைத் தெரிந்து கொண்டால் ஏன் வேர் கீழ்நோக்கி வளர்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அம்மா! மரமோ செடியோ கீழே சாய்ந்து விழாமல் அதைத் தரையோடு இறுக்கிப் பிடித்து வைத்துக்கொண்டிருப்பது வேர்தான். அத்துடன் வேர்தான் மரஞ்செடிகளின் வாயாகும். அதன் மூலமாகத்தான் அவை தமக்கு வேண்டிய உணவுச் சத்துக்களை உறிஞ்சிக்கொள்கின்றன. அதனால்தான் வேர் எப்பொழுதும் தரையை நோக்கியே வளர்கின்றன. அவை இலைகளைப் போல் பச்சை நிறமாகவும் இல்லை, பச்சை நிறமாக இருந்தால்தானே அவைகளுக்குச் சூரிய ஒளி தேவையாகும்? அந்தக் காரணத்தினாலும் வேர்கள் தரையை நாடும்.

தரையை நாடும் என்று சொல்லுவது சரிதான் ஆனால் அவைகளுக்குத் தரை கீழேதான் இருக்கிறது. என்பது எப்படித் தெரியும் என்று கேட்பாய் நம்முடைய காதில் ஒலி பட்டதும் அது இன்ன திசையிலிருந்து வருகிறது என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? அது போலவே வேர்களும் தரை கீழே இருக்கிறதென்று அறிந்து கொள்ளக்கூடிய உணர்ச்சி இருப்பதாக ஸர் பிரான்ஸிஸ் டார்வின் என்னும் அறிஞர் சோதனை மூலம் நிரூபித்திருக்கிறார்.

191அப்பா! காற்று பலமாக அடித்தால் பெரிய மரங்கள் சாய்ந்துவிடுகின்றன, சிறிய செடிகள் சாயாமல் நிற்கின்றன, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! காற்று தரையின் பக்கத்தில் வீசுவதைவிட உயரத்திலேயே அதிக பலமாக வீசும். அதனால் பலமான காற்று தரையிலிருந்து அதிக உயரமாக இல்லாத செடிகளைச் சாய்க்காமல் அதிக உயரமான மரங்களைச் சாய்த்து விடுகிறது.