பக்கம்:தந்தையும் மகளும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தந்தையும்

ஆனால் அதற்கு எம்படித் தன் உடலை வளைக்க முடியும் என்று கேட்பாய், அம்மா! செடிகள் உயிர் வாழ்வதற்காக அவைகளிடம் சில ரசாயனப் பொருள்கள் காணப்படுகின்றன. அவற்றை "ஆக்ஸின்" என்று கூறுவார்கள். அவை செடியின் சகல பாகங்களில் பரவி நிற்கும். அப்படிப் பரவி நிற்பதால் தான் சாதாரணமாகச் செடியானது வளையாமல் நிமிர்ந்து நிற்கிறது.

ஆனால் நாம் செடியை வெயில் படாத சன்னல் மீது வைத்ததும் ஆக்ஸின்கள் அறையின் பக்கமாகவுள்ள செடியின் பாகத்தில் வந்து சேர்ந்து அந்தப் பாகத்தை மட்டும் விரைவாக வளரும்படிச் செய்கிறது. அதனால் செடியானது வெயிலுள்ள வெளிப் பக்கமாக வளைந்து விடுகிறது.

அம்மா! இதையெல்லாம் அறிய அற்புதமாயிருக்கிறது அல்லவா?

193அப்பா! மரஞ் செடிகளில்' இலைகள் வேறு வேறு விதமாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்த உயிருள்ள பொருளைப் பார்த்தாலும் அதன் உறுப்புக்களும் குணங்களும் அது உயிர் வாழ்வதற்கு ஏற்ற வண்ணம் உபயோகப்படுத்துவதற்காகவே அமைந்திருப்பதைக் காணலாம். உதாரணமாக நம்முடைய பற்கள் நாம் உண்ணும் அரிசி முதலிய தானியங்களை மெல்லுவதற்கு ஏற்றவாறும், நாய் முதலிய மாமிச பட்சணிகளுடைய பற்கள் அவை தின்னும் மாமிசத்தை கிழிப்பதற்கு ஏற்றவாறும அமைந்திருப்பதை நீ அறிவாய்.

அது போல் இலைகள் சூரிய ஒளி புகுவதற்கு ஏற்றவாறு மெல்லியனவாயும், சூரிய ஒளியைப் பயன்படுத்தி மாப்பண்டம் தயார் செய்வதற்கு ஏற்றவாறு பச்சை நிறமாயும் அமைந்திருக்கின்றன. அத்துடன் அவை சூரிய ஒளி கிடைக்கக் கூடிய பக்கமாகத் திரும்புவதையும் நீ அறிவாய்.

அது போல் இலைகள் பலவித உருவங்கள் உடையனவாக இருப்பதும் ஏதேனும் ஒரு உபயோகத்துக்கு ஏற்றதா-