பக்கம்:தந்தையும் மகளும்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

183

கவே இருக்கும். ஆனால் என்ன விதமான உபயோகம் என்று திட்டமாகக் கூற முடியாதவர்களாயிருக்கிறோம்.

194அப்பா! ஓடைக்கரையில் காணும் செடிகளுடைய இலைகள் அகலமாக இல்லையே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! செடிகள் உயிரோடிருப்பதற்குத் தண்ணீரும் சூரிய ஒளியும் தேவை என்பதை அறிவாய். அவை சூரிய ஒளியை இலைகள் மூலமாகவும் தண்ணீரை வேர்கள் இலைகள் ஆகிய இரண்டின் மூலமாகவும் பெறுகின்றன. வேர்கள் தரையிலுள்ள நீரை உறிஞ்சுகின்றன. இலைகள் காற்றிலுள்ள நீரைக் கிரகிக்கின்றன. இதுதான் சாதாரணமாக நடக்கிற காரியம்.

ஆனால் நீர்நிலையின் அருகில் உண்டாகும் செடிகளுக்குப் போதுமான நீர் வேர் மூலமாகவே கிடைத்துவிடுகின்றது அதனால் அவற்றின் இலைகள் காற்றிலிருந்து நீரைக் கிரகித்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சூரிய ஒளியை மட்டும் கிரகித்தால் போதும். புற்கள் தங்கள் நீண்ட குறுகிய இலைகள் மூலம் சூரிய ஒளியைக் கிரகித்துக் கொள்வது போல் இந்தச் செடிகளும் தங்கள் குறுகிய இலைகள் மூலம் கிரகித்துக் கொள்கின்றன.

195அப்பா! வாகை மரம் புளிய மரம் இவற்றின் இலைகள் எல்லாம் சிறு சிறு இலைகளாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கூறும் வாகை மரத்தின் இலைகளும் புளிய மரத்தின் இலைகளும் தான் மிகக் சிறியனவாக இருப்பதாக எண்ணாதே. நம் வீட்டுக் கொல்லையில் நிற்கும் முருங்கை மரத்தையும் அகத்தி மரத்தையும் பார். அவற்றின் இலைகளும் சிறியனவே. இந்த மரங்கள் எல்லாம் அதிகமாகக் குழை அடர்ந்தவை, அப்படிக் குழை அடர்ந்த மரங்களில் இலைகள் எல்லாம் சிறியனவாகவே இருக்கும். அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மரங்கள் எல்லாம் மற்ற உயிர்களைப்போலவே உண்ணவும் சுவாசிக்கவும் வேண்டும். அந்த இரண்டு வேலை-