பக்கம்:தந்தையும் மகளும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தந்தையும்

அப்படிச் செய்யாமல் இருப்பதற்காகவே அந்தச் செடிகளில் முட்கள் உண்டாகின்றன. அந்த முட்களுங்கூட செடியின் அடிப்பாகத்திலேயே காணப்படும். எருக்கு போன்ற சில செடிகளில் சாதாரண முட்களுக்குப்பதிலாக மயிர் போன்ற மெல்லிய முட்கள் இருக்கும். சில செடிகளைத் தின்று விடாதபடி சில செடிகளைத் தொட்டால் பிசின்போல் ஒட்டும் இவையெல்லாம் செடிகளைத் தின்று விடாதபடி மிருகங்களைத் தடுப்பதற்காக ஏற்பட்டுள.

பாலை நிலச் செடிகளின் இலைகள் சிறியனவாகவே இருக்கும். செடிகளில் இலைகள் எப்பொழுதும் சுவாசிக்கின்றன என்றும் அப்பொழுது அவற்றிலிருந்து நீராவி வெளியே போகின்றது என்றும் நீ அறிவாய் இலைகள் எவ்வளவுக் கெவ்வளவு அகலமாக இருக்கின்றனவே. அவ்வளவக்கவ்வளவு அதிகமாக நீராவி வெளியேறிவிடும். ஆனால் பாலைவனத்திலோ நீர் குறைவு. அதனால் அங்குள்ள செடிகள் அதிகமான நீராவியை வெளியே விடாமல் இருக்க வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அவற்றின் இலைகள் சிறியவைகளாய் இருக்கின்றன. அது மட்டுமன்று சில செடிகளின் இலைகள் இலைகள்போல் மெல்லியனவாக இரா. கட்டியாக இருக்கும். நீ சப்பாத்திக் கள்ளியைப் பார்த்திருக்கிறாய் அல்லவா? நீ கள்ளி என்று எண்ணுவது தான் அதன் இலை. அது கிடைக்கும் நீரை அதிகமாகச் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவே அதன் இலைகள் இப்படி அகலமாயும் கட்டியாயும் இருக்கின்றன. அப்படிக் கட்டியாயிருப்பதாலும் அதிகமான நீர் ஆவியாக வெளியே போய் விடாது.