பக்கம்:தந்தையும் மகளும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தந்தையும்

அறிஞர்கள் பாக்கட் கடிகார உருவத்துக்கு ஒப்பிடுகிறார்கள். அந்தக் கடிகாரத்தின் விட்டத்தின் அளவு ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் என்றும் கனம் 10 ஆயிரம் ஒளி ஆண்டுகள் என்றும் கணக்கிடுகிறார்கள்.

ஒளிவருஷம் என்றால் தெரியுமா? சாதாரணமாக தூரத்தை இத்தனை மைல்கள் தூரம் என்று கூறுவோம். ஆனால் நட்சத்திரங்கள் வெகு தொலைவில் இருப்பதால் அவ்வாறு இத்தனை மைல்கள் என்று கூறமுடியாது. அதனால் வானசாஸ்திரிகள் எதன் தூரத்தைக் குறிப்பிட வேண்டுமோ, அதனிடமிருந்து ஒளி நமக்கு வந்து சேர எத்தனை ஆண்டுகள் செல்லுமோ அதையே அதன் தூரமாகக் கூறுகிறார்கள்.

ஒளியானது ஒரு செக்கண்டு நேரத்தில் 186500 மைல்கள் செல்லும். அப்படியானால் ஒரு ஆண்டில் சுமார் 6 ஆயிரம் கோடி மைல்கள் செல்லும். இது பெரிய தொகையாயிருப்பதால் இந்தத் தூரத்தையே நட்சத்திரங்களின் தூரத்தைக் கூறுவதற்கான அலகாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அலகுதான் "ஒளி ஆண்டு" என்பது

நட்சத்திரங்கள் கடிகார வடிவில் உள என்று கூறினேன் அல்லவா? அந்தக் கடிகாரத்தின் நடுவில் தான் நட்சத்திரங்களுள் பெரும்பாலானவ காணப்படுகின்றன. கடிகாரத்தின் விளிம்புக்கு அருகே செல்லச் செல்ல அவை குறைந்து கொண்டே போகின்றன. விளிம்புக்கு அப்பால் சென்றுவிட்டால் அங்கே நட்சத்திரங்கள் காணப்படுவதில்லை.

8அப்பா! நட்சத்திரம் சூரியனைப்போல் உருண்டை வடிவம் என்றால் அது சூரியனைப்போல் வட்டமாகத் தெரியவில்லையே, தற்குக் காரணம் என்ன?