பக்கம்:தந்தையும் மகளும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

23

ஆம், அம்மா! நட்சத்திரமும் உருண்டை வடிவம் தான். அதோடு அது சூரியனை விட அநேக மடங்கு பெரியதுமாகும். அப்படியிருந்தும் அது சூரியனைப் போல வட்டமாகத் தோன்றாமல் நம்முடைய கண்ணுக்கு ஒரு சிறு புள்ளி போலவேதான் தெரிகிறது. அதற்குக் காரணம் யாது?

அம்மா! சூரியனைச் சுற்றி ஏழெட்டுக் கிரகங்கள் சுழன்று வருகின்றன என்பதை நீ அறிவாய். அவைகளும் புள்ளிமாதிரித்தான் தெரிகின்றன. ஆயினும் அவைகளைத் தொலைநோக்கி என்னும் கண்ணாடி வழியாகப் பார்த்தால் அவை வட்டமாகவே தெரியும். ஆனால் அப்படி பெரிய தொலைநோக்கி வழியாகப் பார்த்தாலும் மிகப் பெரிய நட்சத்திரங்கள் புள்ளிகள் போலவே தான் தெரியும். இதற்குக் காரணம் நட்சத்திரங்கள் மிகவும் அதிகமான தூரத்தில் இருப்பதுதான். நமக்கு வெகு சமீபத்தில் உள்ள நட்சத்திரத்தை ஆல்பா செண்டர் என்று கூறுவார்கள். அதுகூட 27 லட்சம் கோடி மைல் தூரத்தில் இருப்பதாக வானசாஸ்திரிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படியானால் மற்ற நட்சத்திரங்கள் எவ்வளவு அதிகமான தொலைவில் இருக்கும் என்று யோசித்துப் பார். அதனால் அவைகள் எல்லாம் உருண்டையாக இருந்தாலும் புள்ளிகள் போலவேதான் கண்களுக்குப் புலனாகும்.

9 அப்பா! நட்சத்திரங்களைப் பகலில் பார்க்க முடியுமா?

அம்மா! நட்சத்திரங்கள் வானத்தில் பகலிலும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் பகலில் அவற்றின் ஒளியைவிட சூரியனுடைய ஒளியே அதிகமாயிருப்பதால், அவை நம்முடைய கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால் சில நாட்களில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலும் வரும். அத்துடன் அவை மூன்றும்