பக்கம்:தந்தையும் மகளும்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

25

அம்மா! இரும்பு போன்ற ஒரு தனி வஸ்துவை அதிகக் சூடாக்கி ஒளி விடும்படி செய்து அந்த ஒளியையும் பளிங்கு வழிச் செல்லும்படி செய்தால், அப்பொழுதும் திரையின் மீது வானவில் உருவம் தோன்றும். இது போலவே ஒவ்வொரு தனி வஸ்துவுக்கும் வானவில் உருவம் உண்டாகும். ஆனால் அவை வேறு வேறாக இருக்கும்.

இவற்றையும் சூரிய வானவில்லில் காணப்படும் கோடுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து அந்தக் கோடுகள் சூரியனிலுள்ள பல வஸ்துக்களாலேயே உண்டாவதாக அறிஞர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதுபோலவேதான் நட்சத்திரங்களின் ஒளியையும் ஆராய்ந்து அவற்றிலுள்ள வஸ்துக்கள் இவை என்று அறியக்கூடியவர்களாயிருக்கிறார்கள்.

11அப்பா! நட்சந்திரங்கள் அசைவதில்லை, கிரகங்கள்தாம் அசைகின்றன என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கிரகங்கள்தான் அசைகின்றன என்பதில்லை. நட்சத்திரங்களும் அசையவே செய்கின்றன. ஆனால் கிரகங்கள் நட்சத்திரங்களைப் போல் வெகு தூரத்தில் இல்லை. அத்துடன் அவை சூரியனைச் சுற்றி வெகு விரைவாகவும் ஓடுகின்றன. அதனால் தான் அவை அசைவதாக நம்முடைய கண்ணுக்குப் புலனாகின்றது. ஆனால் நட்சத்திரங்களோ வெகு தூரத்திலிருப்பதால் அவை அசைவது நம்முடைய கண்ணுக்குப் புலனாவதில்லை. அதனால் தான் ஆயிரம் ஆண்டுகள் ஆனபிறகுகூட அவை தோன்றிய இடத்திலேயே தோன்றிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இப்போது வான சாஸ்த்ரிகள் அவற்றைப் படம் பிடித்து ஆராய்ந்து அவை செல்லும் திசைகளையும்