பக்கம்:தந்தையும் மகளும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

27

அம்மா! அவர்கள் அந்த மாதிரியான நட்சத்திரங்களைப் படம் பிடிப்பதற்கு ஏற்ற போட்டோக் கருவிகளை வைத்திருக்கிறார்கள். அதன்மூலம் படம் பிடித்து அறிந்து கொள்கிறார்கள்.

சில ஒளிதரும் நட்சத்திரங்களை தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பார்க்கும்போது இடையிடையே கண்ணுக்குப் புலப்படாமல் போகின்றன. இருண்ட நட்சத்திரம் ஒன்று அதைச் சுற்றி வருவதால்தான் அவ்வாறு இடையிடையே புலனாகாது போவதாக வான சாஸ்திரிகள் தீர்மானிக்கிறார்கள்.

13அப்பா! வானத்தில் மேகமில்லாத நாளில் கூட ஓர் இடத்தில் மெல்லிய வெள்ளை மேகம் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அப்படித் தெரியத்தான் செய்கிறது. ஆனால் அது மேகமன்று. அது ஒருவித நட்சத்திரக் கூட்டமேயாகும். அப்படியானால் அவை நட்சத்திரங்கள் போல் தனித்தனியாகத் தெரியவில்லையே என்று கேட்பாய்.

அம்மா! அறிஞர்கள் நட்சத்திரங்கள் உள்ள இடத்தைப் பாக்கட் கடிகார உருவத்துக்கு ஒப்பிட்டு நமக்குத் தெரியும் நட்சத்திரங்கள் எல்லாம் அதன் நடுவிலேயே இருப்பதாகவும விளிம்புக்கு அருகே செல்லச் செல்ல அவை குறைந்துகொண்டே போவதாகவும் கூறுகிறார்கள்.

அம்மா! அந்த விளிம்பு வெகு தூரத்தில் இருப்பதால் அங்குள்ள நட்சத்திரங்கள் மிகவும் மங்கலாகத்தானே தெரியும்.

அத்துடன் அவை ஆறரைக் கோடியாக இருப்பதாகவும் கணக்கிடுக்கிறார்கள். அதனால்தான் அவை தனித தனியாகத் தெரியாமல் ஒன்றாகச்சேர்ந்து பெரிய மெல்லிய