பக்கம்:தந்தையும் மகளும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தந்தையும்

அதன் ஆகர்ஷண சக்தியால் வாயு மண்டலத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. காற்றும் உஷ்ணமும் இல்லாவிட்டால் உயிர்கள் வாழ்வது எப்படி? அதனால் தான் சந்திர மண்டலத்தில் மக்கள் இல்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

அது போலவே பூமியும் ஆகிவிடுமோ என்று நீ கேட்கிறாய். அம்மா! நம்முடைய பூமியும் குளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதனால் அது நீண்டகாலம் கழித்து மக்கள் வாழ முடியாதபடி ஆகிவிடலாம் என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள்.

17அப்பா! ஒரு வாரத்துக்கு ஏழு நாள் என்று கூறுகிறார்களே அதற்கு காரணம் என்ன?

அம்மா! பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றும் சந்திரன் பூமியைச் சுற்றுகிறது என்றும் நீ அறிவாய. பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவரும் நேரத்தை வருஷம் என்றும் சந்திரன் பூமியை ஒருதடவை சுற்றி வரும் நேரத்தை மாதம் என்றும கூறுகிறோம். மாதத்தை நான்கு பிரிவாக்கி ஒவ்வொரு பிரிவையும் வாரம் என்று கூறுகிறோம். சந்திரன் பூமியைச் சுற்றிவர 28 நாட்கள் ஆவதால் ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள் ஆயின.

18அப்பா! பூமி எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பதாக கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! பூமி எந்நேரமும்! ஓடிக் கொண்டுதானிருக்கிறது. அதுபோல் கிரகங்கள் நட்சத்திரங்கள் எல்லாம் எப்பொழுதும் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன. அதற்குக் காரணத்தைக் கண்டு கூறியவர் ஸர் ஐஸக் நியூட்டன் என்னும் ஆங்கில விஞ்ஞான சிரோன்மணி. அவர் அசைவது சம்பந்தமாக மூன்று விதிகளைக் கூறினார்.

அவற்றுள் முதல் விதி—