36
தந்தையும்
அங்கே மழை பெய்யும்போது அவர்களுடைய வீடுகள் பச்சை மண்ணாக ஆகிவிடுமல்லவா? அதனால் அவர்கள் மழை என்றால் அஞ்சி நடுங்குவார்கள் அல்லவா? ஆனால் அவர்களுடைய அதிர்ஷ்டம் ஆண்டு முழுவதும் அங்கே மழை பெய்வதே இல்லை.
அப்படி மழை இல்லையானால் அவர்கள் குடி தண்ணீருக்கு என்ன செய்வார்கள் என்று கேட்பாய்,அந்த நகரத்துக்கு அருகில் ஓடும் ரிமாக் என்னும் நதி அவர்களுக்கு வேண்டிய தண்ணீர் முழுவதையும் கொடுத்து வருகிறது. அதனால் தண்ணீர் வேண்டுமே என்ற கவலை அவர்களுக்குக் கிடையாது
25அப்பா! நம்முடைய தேசத்தில் மழை பெய்வதுபோலவே இங்கிலாந்து தேசத்தில் பனிக்கட்டி பெய்யும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா ! பூமியில் உண்டாகும் நீராவி மேலே சென்று மேகமாக ஆகிறது என்றும் அந்த மேகம் அதிகமாகக் குளிர்ந்து மழையாகப் பெய்கிறது என்றும் நீ அறிவாய்.
இவ்வாறு மேகத்தில் உண்டாகும் நீர்த்துளிகள் ஐஸ் குளிர் என்னும் O°C டிகிரிக்கும் குறைந்த குளிர் பெறுமானால் அப்போது அவை ஐஸ் போல் இறுகி படிக உருவத்தில் பூமிக்கு வந்து சேர்கின்றன. அதை "வெண் பனி" என்று கூறுவார்கள், சில சமயங்களில் அது சிறிதளவு இளகியும் பெய்யும்.அது ஐஸ்தூள் போல் இருக்கும். மரங்களில் படிந்து அவைகளை வெண்ணிறத்-